உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

47

கிய

கூட்டத்தில் இருந்தோ, சிக்கலில் இருந்தோ உறவு நட்பு ஆ வற்றில் இருந்தோ தம்மைப் பிரித்துக் கொள்ளுதலும் கழற்றுத லாக வழக்கில் ஊன்றியது. “அவன் முழுதாகத் தன்னை நம்மிட மிருந்து கழற்றிக் கொண்டு விட்டான்” என்பது பேச்சு வழக்கு. காரியம் முடிந்தவுடன் கழற்றிக் கொண்டான்” என்பது பெரு வழக்கு.

கழன்றது - பயனற்றது தொடர்பற்றது

பொருத்துவாய் கழன்று விட்டால் அக் கருவி பயன்படுதல் இல்லை. ‘கழன்ற அகப்பை' எனச்சிலரைச் சொல்வது உண்டு. தேங்காய் ஓடும், கைபிடிக் காம்பும் உடையது மர அகப்பை. இதன் காம்பு கழன்றுவிட்டால் தேங்காய் ஓட்டை வைத்துப் பயன் கொள்ள முடியாது. காம்பை வைத்தும் பயன் கொள்ள முடியாது. முன்னது ஒழுகிப்போம்; பின்னது அள்ள வாராது. இதனைக் கருத்தில் கொண்டு கழன்ற அகப்பை என்றால் பயனின்மைப் பொருள் வழக்கில் உண்டாயிற்று. உனக்கு மரை கழன்றுவிட்டதா என்றால் 'மூளைக் கோளாறா?' என்பது பொருளாம். இங்குக் கழற்றுதல் என்பது தொடர்பின்மைப் பொருளது.

கழிசடை ஒதுக்கத்தக்கது

தலையில் இருந்து மயிர் உதிர்வது உண்டு. சிலர்க்குச் சில காலங்களில் மிக உதிரும். அதனை மயிர் கொட்டுகிறது என்பர். ஆனால் தலையைச் சீவிச் சடை கட்டும்போது எவருக்கும் உதிர்வது காணக் கூடியது. தலையில் இருக்கும் அளவும் அதன் பெருமையென்ன? உதிர்ந்ததும் அது தன் மேலேயோ துணி யிலேயோ பட்டால் அடையும் அருவெறுப்பென்ன? உணவில் கிடந்தால்? கழிசடை என்பது உதிர்ந்த மயிர்! தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர், நிலையின் இழிந்தக் கடை” என்பது வள்ளு வம். கழிசடை என்பது ஒதுக்கத்தக்கது ஒழிக்கத் தக்கது என்ப துடன் அவ்வாறு கீழானது என்பதையும் காட்டுவதாம்.

கழித்தல் - கருக்கலைப்பு

கழித்தல் கணக்கில் உண்டு. கழித்துக் கட்டல். ஒதுக்கி விடல் தீர்த்துவிடல் பொருளில் உண்டு. ஆனால் இக்கழித்தல் அவ்வகைப்பட்டதன்று. கழிப்புக்குப் பண்டுவச்சியர் முன்பே இருந்தனர். அப்பொழுது கழிப்பது, பழிப்பதற்கு L செயலாக இருந்தது. கருச் சிதைத்தல் கடும்பாவம் என்னும் கருத்தும் இருந்தது. இதுகால் மலச்சிக்கல் நீக்க மருத்துவம்

மான