உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

65

ஒருகாதலன் தன் காதலியைப் பெற்றவரும் மற்றவரும் அறியாவகையில் வேறிடத்திற்கு அழைத்துக் கொண்டு போதலே கூட்டிக்கொண்டு போதலாகச் சொல்லப்படுகிறது. இதனைப் பழங்கால இலக்கண இலக்கியங்கள் ‘உடன் போக்கு' என்று கூறும்.

கூட்டுதல் - திருமண முடித்தல்

“உனக்குக் கூட்டி வைத்தால்தான் வீட்டில் தங்குவாய்” என்பது ஊர் சுற்றிக்கு வீட்டார் சொல்லும் வாய்ச்சொல். இங்கே கூட்டி வைத்தல் அல்லது கூட்டுதல் என்பது திருமணம் முடித்தலைக் குறிக்கும்.

முதலாவது மணமகள் மேடைக்கு வருவான். அதன் பின், பெண்ணை மணமேடைக்கு அழைத்துக் கொண்டு வந்து அவ னுக்குப் பக்கத்தில் அமர்த்தித் திருமணம் நிகழ்த்துவது நடை முறை. அதனால் ஆண்மகனோடு, பெண்மகளைக் கூட இருக்கச் செய்யும் நிகழ்ச்சி கூட்டுதல் எனப்பட்டதாம். இக்கூட்டுதல் முறைவழி ; நிறை வழி. ஆனால் கூட்டிக் கொடுத்தல் என்பது முறைகேட்டு வழி ; இழி வழி.

கூடாரம் போடல் - தங்கிவிடுதல்

கூடாரம் அடித்தல் என்பதும் இதுவே. ஆடு மாடுகளை மேய்ச்சல் புலம் தேடி ஓட்டி வருபவர் ஆங்காங்குக் கூடாரம் அடித்தல் உண்டு. ஊசி பாசி விற்பவர்கள், கூத்து நிகழ்த்துபவர். சர்க்கசு எனப்படும் வளைய ஆட்டம் நிகழ்த்துநர், படை வீரர், பாடி தங்காளர் ஆயோர் கூடாரம் அடித்துத் தங்குதல் இதுகால் பெருகிவரும் காட்சியாம். புறம் போக்கு நிலத்தில் திடுமெனக் கூடாரங்கள் தோன்றிப் பின்னர் வீடாதலும் புற் றீசலான நகர்ப் புறங்களில் காண்பதே. கூடாரம் அடித்தவர்கள் ஆங்கே தங்குதல் உண்மையால், பல நாள் தங்கும் விருந்தாளரைக் கூடாரம் போட்டுவிட்டதாகக் கூறுவது வழக்கமாயிற்று. “என்ன, உங்கள் வீட்டில் கூடாரம் போட்டு விட்டார்களா?" என விருந்தாளிகள் தங்கிவிடக் கண்ட பக்கத்து வீட்டார் கேட்பது வழக்கம். கெடுபிடி - நெருக்குதல்

கெடுவாவது தவணை.

ன்னகாலம் என வரையறுக்கப்

பட்டது கெடுபிடியாகும். அந்நாளில் செலுத்தவேண்டியதைச் செலுத்தாவிட்டாலும், வந்து சேரவேண்டிய ஆணை நடை முறைப்படுத்தத் தவறிவிட்டாலும் பிடிப்பாணை பிறப்பிப்பது