84
இளங்குமரனார் தமிழ் வளம் – 10 ♡
பாவும் இவ் வைவகை அடிகாளலும் இயலுமோ என்பார்க்கு அற்றன்று; மரபுநிலை ஆய்ந்து எவ்வெவ் வடியால் எவ்வெப் பா வரும் என்பதைக் கண்டு கொள்க என்பாராய்க் கூறினார்.
அடிவகை இத்துணை என்பதும், இன்ன அடி இவ் வளவினது என்பதும், இன்ன அடிகள் இன்ன பாவிற்குரியன என்பன பாக்களுக்கு வரும் அடிச்சிற்றெல்லை பேரெல்லை இவ்வளவின என்பதும் ஆக அடியின் இலக்கணம் நான்கு கூற்றினவாகக் கூறப் பெறும். அவற்றுள் முதற்கூறு இந் நூற் பாவிற் கூறினார்; எஞ்சியவை முறையே கூறுவார்.
அடி அளவு
22. இருசீர் குறளடி ; சிந்தடி முச்சீர் ; அளவடி நாற்சீர் ; 'ஐஞ்சீர் நெடிலடி; அறுசீர் கழிநெடி லாகும் என்ப.
இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் இவ்வளவிற்று என்பது கூறிற்று.
-யா. வி. 24 மேற். -யா. கா. 12.
ன்ன அடி
இ - ள்.) இரண்டு சீர்களை யுடையது குறளடி ; மூன்று சீர்களை யுடையது சிந்தடி ; நான்கு சீர்களை யுடையது அளவடி; ஐந்து சீர்களை யுடையது நெடிலடி ; ஆறு சீர்களை யுடையது கழி நெடிலடி என்று இலக்கணம் கண்டோர் கூறுவர் என்றவாறு.
66
என்பன
ஆகும் என்பதை இடைநிலை விளக்காகக் கொண்டு "இருசீர் குறளடி யாகும் ; சிந்தடி முச்சீர் ஆகும் போலப் பிறவற்றோடும் ஒட்டிக் கொள்க.
“திரைத்த சாலிகை நிரைத்த போல்நிரந்
(வஞ்சித்துறை)
திரைப்ப தேன்களே
விரைக்கொள் மாலையாய்'
99
து குறளடியான் வந்த செய்யுள்.
(பா.வே.) 1. அறுசீர் அதனின், இழிப நெடிலடி என்றிசினோரே.
-சூளாமணி 744,