காக்கை பாடினியம்
91
கழிநெடிலடி என்றும், இருபது எழுத்தின் மிக்க நாற்சீரடிப்பா இல்லை என்றும் கூறுவர்.
மேலும், குறளடி முதலாகிய ஐந்தடியும் ஆசிரியப்பாவிற்கு உரிய என்றும், சிந்தடியும் அளவடியும் நெடிலடியின் முதல் இரண்டடியும் வெண்பாவிற்கு உரிய என்றும், அளவடியுள் கடைசி இரண்டடியும் நெடிலடியும் கழிநெடிலடியும் இலக்கணக் கலிப்பாவிற்கு ாவிற்கு உரிய என்றும், றும், நான்கெழுத்து முதல் பன்னிரண்டெழுத்தின் காறும் இருசீரடி வஞ்சிப்பாவிற்கு உரிய என்றும், எட்டெழுத்து முதலாக நெடிலடிக்குக் கூறிய அளவு காறும் முச்சீரடி வஞ்சிப்பாவிற்கு உரியவென்றும் கூறுவர்.
என்னை?
“நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே' “நாலெழுத் தாதி ஆறெழுத் தெல்லை ஏறிய நிலத்த குறளடி என்ப” “ஏழெழுத் தென்ப சிந்தடிக் களவே ஈரெழுத் தேற்றம் அவ்வழி யான “பத்தெழுத் தென்ப நேரடிக் களவே ஒத்த நாலெழுத் தொற்றலங் கடையே” “மூவைந் தெழுத்து நெடிலடிக் களவே ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப் "மூவா றெழுத்துக் கழிநெடிற் களவே ஈரெழுத்து மிகுதலும் இவட்பெறும் என்ப
-தொல். பொருள். 344, 348, 352.
என்றார் தொல்காப்பியனார் ஆகலின்.
குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் ஒற்று ஆகியவற்றை
ஒழித்து அடிக்கு எழுத்தெண்ணுக.
(எ - டு.)
(நேரிசை ஆசிரியப்பா)
குறளடி 4-6
பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து
(4)
(5)
வண்டு சூழ விண்டு வீங்கி
(6)
சிந்தடி
7-9
நீர்வாய்க் கொண்டு நீண்ட நீலம் ஊர்வாய் ஊதை வீச ஊர்வாய்
மணியேர் நுண்டோ டொல்கி மாலை
(7)
(8)
(9)