130
-
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
இ ள்.) முதற் சீருடன் இரண்டாம் சீர்க்கண்ணும் மோனை முதலிய தொடுக்கப் பெறுமாயின் அஃது இணை என்று கூறப் பெறும் என்றவாறு.
அடிமோனை முதலியன முதற்சீர் கொண்டு எண்ணப் பெற்றன வாகலின் அம் முதற் சீருடன் இரண்டாம்சீர் இணைந்து வரின் என்பது கொண்டாம். இணை என்பதை மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்னும் ஐந்து தொடைகளுக்கும் கொள்க. மேல் வருவனவற்றிற்கும் இவ்வாறே ஒட்டிக் கொள்க. இணைதலால் 'இணை' என்பது காரணக்குறி. இணை
யசை என்று இவ்வாசிரியர் கொண்டதும் அறிக.
66
இரண்டாம்சீர் வரின்" என்றது, முதற் சீர்க்கண் வந்தாற் போல இரண்டாம் சீர்க்கண்ணும் வருதல் என்னும் பொருள் தந்தது. இவ்வாறே பிறரும், 'இருசீர் மிசைவரத் தொடுப்பது இணையே' என்றார்.
(எ-டு.)
(குறள் வெண்பா)
“ஈத்துவக்கம் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்'
என்றும்,
(நேரிசை ஆசிரியப்பா)
‘தண்ணறுந் தகரம் நீவிய கூந்தல்
தாதார் தண்போ தட்டுபு முடித்த
தயங்குமணித் தளர்நடைப் புதல்வர் தாயொடும்
தம்மனைத் தமரொடும் கெழீஇத்
தனிநிலைத் தலைமையொடு பெருங்குறை வின்றே”
என்றும் இணைமோனை வந்தது.
(குறள் வெண்பா)
“கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்'
என்றும்,
-திருக். 228.
-யா. வி. 42 மேற்.
-திருக். 1293.