காக்கை பாடினியம்
இரட்டைத் தொடை
42. ஒருசீர் அடிமுழு தாயின் இரட்டை.
149
இவ்வுரை மேற்கொள் நூற்பா என்ன கூறிற்றோ எனின் மேலே கூறிய தொடைகளை அன்றி இரட்டைத் தொடை, அந்தாதித் தொடை, செந்தொடை என்பனவும் உள என்று கூறத் தொடங்கி இரட்டைத் தொடையாவது இஃதென்பது கூறிற்று.
ள்.) முதற்சீர் வந்தவாறே அவ்வடியிலுள்ள நாற் சீர்களும் வருமாயின் அஃதிரட்டைத் தொடை எனப் பெயர் பெறும் என்றவாறு.
வ
என்றது, அடியின் முதற்சீரில் வந்த சொல்லே நான்கு சீர்களிலும் மடங்கி வருதல் இரட்டை என்பதாம்.
அடி முழுதும் என்றார் ஆயினும் நாற்சீர் அடியே அடியெனும் அளவு கொண்டு தொடை விகற்பம் கூறப்பெறும் ஆகலின் அவ்வளவே அளவென்க.
அடிமுழு தொன்றின் என்னாமல் அடிமுழுது ஆயின் என்றார், இது பிற தொடைகளைப் போல் எழுத்தோ வருக்கமோ; இனமோ, அளவோ முரணோ கொண்டு வருவதன்று முதற்சீர்ச் சொல்லே மடங்கி வருவது என்ற வேறுபாடு காட்டுவதற்கு இனி ஒன்றின் எனினும் குற்றமின்று. ஒன்றுபோல என்னும் பாருளும் பயக்குமாகலின். அதனால் அன்றே,
“முழுவதும் ஒன்றின் இரட்டை ஆகும்”
என்று பல்காயனாரும்,
66
'சீர்முழு தொன்றின் இரட்டை ஆகும்
என்று நற்றத்தனாரும்,
“ஒருசீர் அடிமுழுதும் வருவ திரட்டை”
என்று மயேச்சுரனாரும்,
66
‘அடிமுழு தொருசீர் வரினஃ திரட்டை”
-யா. வி 51 மேற்.
என்று பரிமாணனாரும் இருவகையாகவும் கூறினர். (எ-டு)
1. அவிநயனார். யா.வி.51 மேற்