காக்கை பாடினியம்
(குறள் வெண்பா)
“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு”
இவ்வெண்பா,
"தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் தேமாங்காய் காசு
وو
159
-திருக். 397.
என்று அலகுண்டு, வெண்சீர் வெண்டளையானே வந்தமையான் ஏந்திசைச் செப்பலாயிற்று.
(குறள் வெண்பா)
“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்”
இவ் வெண்பா,
-திருக். 28.
66
'கருவிளம் தேமா புளிமா புளிமா
கருவிளம் தேமா மலர்"
என அலகிடப் பெற்று, இயற்சீர் வெண்டளையானே வந்தமையான் தூங்கிசைச் செப்பல் ஆயிற்று.
66
(குறள் வெண்பா)
‘கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி”
இவ் வெண்பா,
"தேமாங்காய் கூவிளம் தேமா கருவிளங்காய்
தேமாங்காய் தேமா மலர்'
-திருக். 356.
என அலகிடப் பெற்று இயற்சீர் வெண்சீர் என்னும் இருவகை வெண்டளைகளானும் வந்தமையால் ஒழுகிசைச் செப்பல்
ஆயிற்று.
‘காசு’ என்றும் ‘மலர்' என்றும் வெண்பாவின் ஈற்றுச்சீர் அலகூட்டப் பெற்றது என்னை? எனின் அதனைக் கூறுவதன்றே முன்னே வரும் நூற்பா என அமைக.