காக்கை பாடினியம்
குறள் வெண்பா
48. தொடையொன் றடியிரண் டாகி வருமேற்
குறளின் பெயர்க்கொடை கொள்ளப் படுமே.
163
-யா. வி. 57 மேற்.
-யா. கா. 23 மேற்.
இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் குறள், சிந்து, நேரிசை, ன்னிசை, பஃறொடை என்னும் வெண்பா வகையுள் குறள் வெண்பாவினது இலக்கணம் கூறிற்று.
- ள்.) (வெண்பாவிற்கெனக் கூறப்பெற்ற இலக்கண அமைதி பூண்டு) ஒரு தொடை ஈரடியாகி, குறள் வெண்பா என்று சான்றோரால் சூட்டப் பெறும் பெயர்க்குரிமை யுடையதாகி வரும் என்றவாறு.
ஒருதொடை யீரடி என்றமையால் மேலையடி நாற்சீராய் ஈற்றடி முச்சீராய் வருமெனக் கொள்க. இதனை ஒருசார் ஆசிரியர் ஓரடி முக்கால் என்றதூஉம் அறிக. (யா. கா. 23) ஆசிரியர் தொல்காப்பியனார்,
“குறுவெண் பாட்டின் அளவெழு சீரே"
என ஈரடியும் கூட்டி யுரைத்தார்.
-செய். 156.
தொடை ஒன்று என்னவே அடியிரண்டு எனக் கொள்ளப் பெறுமாக, அடியிரண்டென்றது என்னை எனின், குறட்பா வின்கண் முதலடி ஈற்றுச் சீர்க்கண் முதற்சீர்க் கேற்ற எதுகை பெற்று வருதலும், இரண்டாம் அடி முதற்சீர்க்கண் எதுகை பெற்று வருதலும் என்னும் இருவகை மரபும் உண்டென்பது இயம்புதற்கு இவ்வாறு கூறினார் என்க.
(குறள் வெண்பா)
“உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர்"
என்றும்,
-திருக். 395.