காக்கை பாடினியம்
திரண்டு துணியாய் இடைநனி போழ்ந்து
நிரந்தடி மூன்றின நேரிசை வெண்பா
171
என ஒருசீர் மாற்றிக் கொள்ளின் நேரிசைச் சிந்தியல் வெண்பா வின் இலக்கணம் கூறிற்றாம்.
இன்னிசை வெண்பா
51. தனிச்சொல் தழுவல ஆகி விகற்பம் பலபல தோன்றினும் ஒன்றே வரினும் இயற்பெயர் இன்னிசை என்றிசி னோரே.
-யா. வி. 61 மேற்.
இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையே இன்னிசை வெண்பா இன்னதெனக் கூறிற்று.
-
ள்.) வெண்பாவின், இரண்டாம்அடி இறுதிச்சீர் (இ முதற்றொடைக்கு ஏற்பத் தனிச்சொல் தழுவாது, பல விகற்பகங் களோடு வரினும், ஒரு விகற்பத்தோடு வரினும் அதன் பெயர் ன்னிசை வெண்பா என்று கூறுவர் அறிந்தோர் என்றவாறு.
இன்னிசையாவது இனிய இசை, நேரிசையாவது சான்றோ ரால் தக்கது என நேர்ந்த இசை. இரண்டாம் அடி இறுதிச் சீர் முதற்றொடைக்கு ஏற்ப அமைத்தல் முறையாகவும் பொருட் டொடர் பருமையும், ஓசைப்பாடு கெடாமையும் கருதி அமைக்கப் பெறுவதாகலின் இன்னிசை என்றார். ஆயினும் நேரிசை யளவு அத்துணைச் சிறப்பின்று என்பாராய்ச் 'சிறப்புடைப் பொருளை முந்துறக் கிளத்தல்' என்னும் முறையால் நேரிசை வெண்பா வினை உரைத்துப் பின்னே இன்னிசை வெண்பாவினை உரைத் தார் என்க. 'இவ்வாறு வாராதது இன்னிசை' எனின் 'இவ்வாறு வருதலே சீரிது' என்பது பெறப்பட்டதாம்.
தனிச்சொல் இன்றி' என்னாமல் 'தழுவலவாகி' என்ற விதப்பினால், தனிச்சொல் தழுவிப் பலவிகற்பத்தான் வருவனவும், அடியடிதோறும் ஒரூஉத் தொடை பெற்று வருவனவும், நேரிசை வெண்பாவில் வேறுபட்டுப் பிறவாறு வருவனவும் இன்னிசை என்று கொள்க. இதனால் அன்றே யாப்பருங்கலவிருத்தி யுடையாரும், “தனிச்சொல் பெற்றுப் பல விகற்பத்தால் வருவன விதப்பினால் உடன்பட்டார் காக்கை பாடினியார்” என்றார்
என்க.
இன்னிசை வெண்பா வருமாற்றை,