174
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
அரசிலான் இல்வழி இல்லை; அரசனும் இல்வாழ்வார் இல்வழி இல்.”
-நான்மணிக்.8
இஃது அடிதோறும் ஒரூஉத்தொடை பெற்று வந்த இன்னிசை வெண்பா.
(இன்னிசை வெண்பா)
“கடித்துக் கரும்பினைக் கண்டகர நூறி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்
வடுப்பட வைதிறந்தக் கண்ணும்-குடிப்பிறந்தார் கூறார்தம் வாயிற் சிதைந்து"
(இன்னிசை வெண்பா)
“வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை
அளந்தன போகம் அவரவ ராற்றான்
விளங்காய் திரட்டினார் இல்லை-களங்கனியைக் காரெனச் செய்தாரும் இல்
-நாலடியார். 156.
-நாலடியார் 107.
இவை மூன்றாமடி இறுதிச்சீர் தனிச்சொல் பெற்று இருவிகற் பத்தான் வந்த இன்னிசை வெண்பா.
இனிப் பிறவாறு வருவனவும் கொள்க. இன்னிசை வெண்பாவிற்குக் கூறப் பெற்ற இந்நூற்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிற்கும் தகுமாறு அமைந்துள்ளமை அறிக.
இவ் விலக்கணத்தை,
“விகற்பொன் றாகியும் மிக்கும் தனிச்சொல் இயற்றப் படாதன இன்னிசை வெண்பா’
என்று அமிதசாகரனாரும்.
66
99
-யா. வி. 61.
'ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல் இன்றி வருவன இன்னிசை வெண்பா
-யா. வி. 61 மேற்.
என்று சிறுகாக்கை பாடினியாரும் கூறினார் ஆதல் அறிக.