காக்கை பாடினியம்
183
66
66
(குறட்டாழிசை)
'முன்புல கீன்ற முகிழ் முலைக் கன்னியோ
டின்புறும் யோகி எழுபுவிக் கரசே
(குறட்டாழிசை)
“திடுதிம் மெனநின் றுமுழா அதிரப் படிதம் பயில்கூத் தருமார்த் தனரே”
-சிதம்பரச் செய்யுட்கோவை 31.
-யா. வி. 64.
இவை இரண்டடியாய் ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் இன்றி இரண்டடியும் ஒத்து வந்தமையால் செந்துறை சிதைந்த குறட்டாழிசை.
(குறட்டாழிசை)
“வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள் பண்டையள் அல்லள் படி
-யா. வி. 64 மேற்.
-யா. கா. 26 மேற்.
(குறட்டாழிசை)
“பின்றாழ் நறுங்கூந்தற் பிடிதரீஇ மால்யானைக்
கன்றீனு முக்கட் களிறு”
-சி. செ. கோவை 32.
இவை செப்பலோசையிற் சிதைந்து வந்த குறட்டாழிசை.
வெளிவிருத்தம்
56. ஒருமூன் றொருநான் கடியடி தோறும் தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை விருத்தம் எனப்பெயர் வேண்டப் படுமே.
-யா. வி. 68 மேற்.
-யா. கா. 27 மேற்.
இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் வெளி விருத்தமாவது இன்னது எனக் கூறிற்று.
-
இ ள்.) மூன்றடியாயும், நான்கடியாயும் வந்து அடி தோறும் தனிச்சொல் பெற்று நடக்குமவை யாவை. அவை வெளிவிருத்தம் எனப்பெயர் கொள்ளப் பெறும் என்றவாறு.