காக்கை பாடினியம்
185
இவை மூன்றடியாய் அடிதோறும் இறுதிக்கண் தனிச்சொல் பெற்று வந்த வெளிவிருத்தம்.
(வெளிவிருத்தம்)
"மாலை மணங்கமழும் மௌவல் முகைவிரியும்-எந்தைகுன்றம் காலை மணிக்குவளை காதலர்போல் கண்விழிக்கும்-எந்தைகுன்றம் நீல மழைமுங்கி நின்று சிலம்பதிரும்-எந்தைகுன்றம் ஆலி மயிலகவ அந்தண் டுவனமே-எந்தைகுன்றம்
(வெளிவிருத்தம்)
-யா. வி. 68 மேற்.
“சொல்லல் சொல்லல் தீயவை சொல்லல் - எஞ்ஞான்றும் புல்லல் புல்லல் தீநெறி புல்லல் - எஞ்ஞான்றும் கொல்லல் கொல்லல் செய்நலம் கொல்லல் - எஞ்ஞான்றும் நில்லல் நில்லல் நீசரைச் சார்ந்தங் - கெஞ்ஞான்றும்
66
(வெளிவிருத்தம்)
“ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார்-ஒருசாரார் கூகூ வென்றே கூவிளி கொண்டார்-ஒருசாரார் மாமா என்றே மாய்ந்தனர் நீத்தார்-ஒருசாரார் ஏகீர் நாகீர் என்செய்தும் என்றார்-ஒருசாரார்
-யா. வி. 68 மேற்.
-யா. வி. 68 மேற்.
-யா. கா. 27, 41 மேற்.
வை நான்கடியாய் அடிதோறும் இறுதிக்கண் தனிச் சொல் வ பெற்று வந்த வெளி விருத்தம்.
வெண்டுறை
57. அடியைந் தாகியும் மிக்கும் ஈற்றடி ஒன்றும் இரண்டும் சீர்தப வரினும்
வெண்டுறை என்னும் விதியின வாகும்.
-யா. வி. 67 மேற்.
இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் வெண்டுறையாவது இன்னது என்பது கூறிற்று.
-
ள்.) ஐந்தடிகளையுடைய தாகவும் அவ்வடிகளினும் ஒன்றோ இரண்டோ மிகுத்தும், முதற்கண் அடிகளுக்கு