உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ஆசிரியப்பாவும் அதன் வகையும்

நேரிசை ஆசிரியப்பா

59. இறுசீர் அடிமேல் ஒரு சீர் குறையடி

பெறுவன நேரிசை ஆசிரி யம்மே.

'இவ்வுரை மேற்கோள் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நேரிசை யாசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, இணைக் குறள் ஆசிரியப்பா, அடி மறிமண்டில ஆசிரியப்பா என்பன வற்றுள் நேரிசை ஆசிரியப்பா ஆமாறு கூறிற்று.

இ - ள்.) ஈற்றடிக்கு மேலடி, ஒரு சீர் குறையடியாகி வருவன யாவை அவை நேரிசை ஆசிரியப்பா என்றவாறு.

'இறும் அடி' என்னாது இறு சீர் அடி' என்றார், ஈற்றடி ஈற்றுச்சீர்க்கு நேர்மேல் அமைந்த ஒரு சீர் குறைந்த அடியை. ஈற்றயலடியில் எச்சீர் குறையுமோ எனின், இறுதிச் சீர் ஒன்றுமே குறையும் என்க. இனிச், சீருற முடியும் மேலடி என்னும் பொருட்டு மாம். சீர் என்னும் இவ்விதப்பால், ஏ, ஓ, ஈ, ஆய், என், ஐ என்று சிரியப்பா முடியும் என்பது கொள்க. என்னை?

66

“அகவல் இசையன அகவல்; மற்றவை

ஏஓஈ ஆய் என்ஐ யென் றிறுமே”

என்றார் ஆகலின்.

யா. வி.69.

ஆசிரியம் என்னாது ஆசிரியம்மே என விரித்துக் கூறிய தால் அகவல் - ஏந்திசை அகவல், தூங்கிசை அகவல், ஒழுகிசை அகவல் என முத்திறப்படும் எனக் கொள்க.

ஏந்திசை அகவலாவது நேரொன்றாசிரியத் தளையான் வருவது; தூங்கிசை அகவலாவது, நிரையொன்றாசிரியத் தளை யான் வருவது. ஒழுகிசை அகவலாவது, இவ்விரு தளையானும் வருவது. என்னை?

1. சிறுகாக்கை பாடினியார். யா.வி.71 மேற்.