உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

194

பூண்முலை நோக்கி இறைஞ்சி

வாண்முக எருத்தம் கோட்டினள் மடந்தை”

ஃது ஐகாரத்தான் முடிந்தது.

-யா. வி: 69 மேற்.

இனி, இகரத்தான் முடிந்தனவும் உள என்பதை மணி வாசகரின் போற்றித் திருவகவலாலும், வள்ளலாரின் ‘அருட்பெருஞ் சோதி’ அகவலாலும் அறிக. பிறவும் அன்ன. (நேரிசை ஆசிரியப்பா)

“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே சாரற்

கருங்கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே”

(நேரிசை ஆசிரியப்பா)

"வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

கானற் சேக்கும் துறைவனோ

டியானெவன் செய்கோ பொய்க்குமிவ் வூரே'

-

- குறுந்தொகை3.

-ஐங்குறு நூறு 154.

இவை ஈற்றயலடி முச்சீராயின ஆகலின் நேரிசை ஆசிரியப்பா.

நிலைமண்டில ஆசிரியப்பா

60. ஒத்த அடித்தாய் உலையா மரபொடு நிற்பது தானே நிலைமண் டிலமே.

-யா. கா. 28 மேற்.

இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் நிலைமண்டில ஆசிரியப்பா ஆமாறு கூறிற்று. ல

-

(இ ள்.) எல்லா அடிகளும் அளவடிகளாய், மரபுநிலை திரியாது நிற்பது யாது அது நிலைமண்டில ஆசிரியப்பா என்றவாறு.