காக்கை பாடினியம்
66
5
மாணவர் என்பதை அடிப்படை அற்ற செய்தி என்று கொள்ளுதலே சாலும். இனி, வேறொரு குறிப்பும் இவண் கருதத்தக்கதாம். சாலும்.இனி, ஆசிரியர் தொல்காப்பியனார் அறமுதலாகிய மும்முதற் பொருட்கும் உரியவையாய் வரும் பாவகைகளை, ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென, நாலியற் றென்ப பாவகை விரியே” என்று கூறினார். பரிபாடல் இலக்கணமும் கூறினார். ஆனால் அவர் காலத்தில் பாவினங்கள் தோன்றிற்றில்லை. கலிப்பாவின் உறுப்புக்களாகிய தரவு, தாழிசை, எண் முதலியவையும், கொச்சகக் கலி உறுப்புக்களும் சங்கச் சான்றோர் காலத்திற்குப் பின்னே வளர்ச்சியுற்றுத் தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்களாக உருக்கொண்டன. பிற்காலத்தார் பாவினங் கோடல் ஆசிரியர்' தொல்காப்பியனார்க்கு உடன்பாடன்று என்றும், மரபும் அன்று என்றும் உரையாசிரியர்கள் தெள்ளிதின் விளக்கிப் போந்தனர். ஆனால் காக்கை பாடினியாரோ
66
'விருத்தம் துறையொடு தாழிசை என்றா இனச்செய்யுள் எல்லா அடியினும் நடக்கும்”
என்றும்,
“வெண்பா விருத்தம் துறையொடு தாழிசை என்றிம் முறையின் எண்ணிய மும்மையும் தத்தம் பெயரால் தழுவும் பெயரே'
என்றும் கூறியதுடன் அகவல், கலி, வஞ்சிப் பாக்களின் இனங்களைத் தனித்தனி நூற்பாக்களிலும் விரித்துரைத்துப் போதுகின்றார். இதனால் பாவினங்கள் பல்கி வளர்ந்த காலத்தேதான் காக்கையாடினியார் இருந்து செய்தாராதல் வேண்டும். என்னெனில், இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் முறைமையாகலின்.
1. “தரவின் றாகித் தாழிசை பெற்றும்’
நூல்
எனவருவம் தொல்காப்பியச் செய்யுளியல் நூற்பாவிற்குப் பேராசிரியரும் நச்சினார்க் கினியரும் உரைத்த உரை காண்க. அன்றியும், “இத் தொடர்நிலைச் செய்யுளை (சீவகசிந்தாமணியை) இனமென்ப. அந் நூல்கள் இனமென்று காட்டிய உதாரணங்கள் தாம் அவர் சேர்ந்த அவ்வப் பாக்கட்கே இனமாகாது ஒழிந்த பாக்கட்கும் இனமாதற்கு ஏற்றலானும், துறையை விருத்தமாகவும் தாழிசையை விருத்தமாகவும் ஓதுதற்கு அவை ஏற்றமையானும் 'மூவா முதலா' என்னும் கவி முதலியன தாழம்பட்ட ஓசையான் “விருத்தமாயும் சீர்வரையறையானும் மிகத்துள்ளிய ஓசையானும் துறையாயும் கிடத்தலின் இதனை விருத்தக்கலித்துறை எனல் வேண்டும்; அது கூறவே துறையும் விருத்தமுமெனப் பகுத்தோதிய இலக்கணம் நிரம்பாதாம் ஆகலானும் இனமென்றல் பொருத்தமின்று. இச் செய்யுட்களின் ஓசை வேற்றுமையும் மிக்கும் குறைந்தும் வருவனவும் கலிக்கே ஏற்றலிற் கொச்சகம் என்றடங்கின” என்னும் உரைப்பகுதியும் காண்க. (சீவகசிந்தாமணி. கடவுள் வாழ்த்து. நச்.)