காக்கை பாடினியம்
213
இனி ஒருசார் ஆசிரியர் வெண்கலி எனினும், கலிவெண்பா எனினும் ஒக்கும் எனக் கொள்வர். இவர்க்கு அது கருத்தன்று என்பது முன்னே காட்டுதும்.
'ஒத்தாழிசைக்கலி' எனக் கூறினார், நேரிசை ஒத்தாழிசைக் கலி, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலி, வண்ணக ஒத்தாழிசைக் கலி என்னும் மூன்றும் கொள்க.
கொச்சகம் என்பது கொச்சகக் கலி. மகளிர் உடையில் பல கூறாக மடிந்து தொங்கும் கொய்சகம் போலப் பல திறப்பட்ட உறுப்புக்களைத் தன்னகத்துக் கொண்டது எனக் காரணக்
குறி.
"பலகோடு பட அடுக்கி உடுக்கும் உடையினைக் கொச்ச கம் என்ப ; அதுபோலச் சிறியவும் பெரியவும் விராய் அடுக்கியும் தம்முள் ஒப்ப அடுக்கியும் செய்யப்படும் பாட்டதனைக் கொச்சகம் என்றார். இக்காலத்தார் அதனைப் பெண்டிர்க்குரிய உடை உறுப்பாக்கியும் கொய்சகம் என்று சிதைத்தும் வழங்குப்" என்பார் பேராசிரியர் (தொல். பொருள். 464).
Ꮒ
சிறப்பில்லாதது என்னும் பொருளொடு வருவது கொச்ச கம்என்பாரும் உளர். அவர், “சிறப்பில்லாததனை ஒரு சாரார் கொச்சை என்றும், கொச்சகம் என்றும் வழங்குவர் எனக் கொள்க” என்றனர். (யா. வி. 79)
கொச்சகம், தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச் சகக் கலிப்பா, சிஃறாழிசைச் கொச்சகக் கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என ஐவகைப்படும் என்பர்.
கலிப்பாவின் வகையை,
“ஒத்தா ழிசைக்கலி வெண்கலிப் பாவே கொச்சகக் கலியொடு கலிமூன் றாகும்"
என அமித சாகரனாரும்,
“ஒத்தா ழிசைக்கலி வெண்கலி கொச்சகமென முத்திறத் தான்வரும் கலிப்பா என்ப”
என அவிநயனாரும் கூறினார்.
-யா. வி. 79.
-யா. வி. 79.