உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

தினைத்துணையும் தீயவை இன்மையிற் சேர்தும் வினைத்தொகையை வீட்டுக என்று.

இது வெண் சுரிதகம்.

219

-யா. வி. 82 மேற்.

-இலக் விளக். 788 மேற்.

இதுவும் நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா.

ஒத்தாழிசை எனினும் நேரிசை ஒத்தாழிசை எனினும் ஒக்கும். பிற ஒத்தாழிசைகளும் உண்டே எனின் அவை வண்ணக ஒத்தாழிசை, அம்போதரங்க ஒத்தாழிசை என விகற்பங் கூறி அழைக்கப் பெறும். ஒழுக்கம் என்பதே நல்லொழுக்கம் என்றா யினாற்போல, ஒத்தாழிசை என்பதே நேரிசை ஒத்தாழிசை என்றாயிற்று என்க.

66

இதன் இலக்கணத்தை இதன் வழி நூல் உடையாரும், தரவொன்று தாழிசை மூன்றும் சமனாய்த்

தரவிற் சுருங்கித் தனிநிலைத் தாகிச்

சுரிதகம் சொன்ன இரண்டினுள் ஒன்றாய்

நிகழ்வது நேரிசை ஒத்தா ழிசையே”

-யா. வி. 82.

என்றார். இந்நூலுடையார்க்குத் தொகுத்துக் கூறல் இயல்பாக

லின் இவ்வாறு கூறினார்.

தரவு இன்ன தென்பது

72. தன்னுடை அந்தமும் தாழிசை ஆதியும்

துன்னும் இடத்துத் துணிந்தது போலிசை தன்னொடு நிற்றல் தரவிற் கியல்பே.

-யா.வி. 82 மேற்.

இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் மேலே கூறிய நான்கு உறுப்புக்களுள் தரவாவது இன்னது என்பது கூறிற்று.

(இ

-

ள்.) தனது இறுதியும் தாழிசையின் முதலும் கூடும் இடத்துப் பிறிதொடும் தொடராது தனித்து நிற்றல் தரவிற்கு இயல்பாகும் என்றவாறு.

தரவு, தாழிசை முதலியவற்றுடன் தொடர்ந்து நிற்குமோ என்றும், யாங்கு நிற்குமோ என்றும் வினாவுவார்க்கு, தரவு தனித்து நிற்கும் என்றும், பாவின் முதற்கண்ணே தாழிசைக்கு முன்னாக நிற்கும் என்றும் வெளிப்பட உரைத்தார். தரவு