உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது தரவு.

காக்கை பாடினியம்

முரைசதிர் வியன்மதுரை முழுவதூஉம் தலைபனிப்பப் புரைதொடித் திரள்திண்டோள் போர்மலைந்த மறமல்லர் அடியொடு முடியிறுப்புண் டயர்ந்தவண் நிலஞ்சேரப் பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ? கலியொலி வியனுலகம் கலந்துடன் நனிநடுங்க வலியியல் அவிராழி மாறெதிர்ந்த மருட்சோவும் மாணாதார் உடம்போடு மறம்பிதிர வெதிர்கலங்கச் சேணுயர் இருவிசும்பிற் செகுத்ததுநின் சினமாமோ? படுமணி இனநிரைகள் பரந்துடன் இரிந்தோடக் கடுமுரண் எதிர்மலைந்த காரொலி எழிலேறு வெரிநொடு மருப்பொசிய வீழ்ந்துதிறம் வேறாக எருமலி பெருந்தொழுவின் இறுத்ததுநின் இகலாமோ?

வை தாழிசை.

இலங்கொளி மரகதம் எழில்மிகு வியன்கடல் வலம்புரித் தடக்கை மாஅல்! நின்னிறம்.

விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும் பொருகளி றட்டோய் ! புரையும் நின்னுடை.

இவை நாற்சீர் ஈரடி இரண்டு அம்போ தரங்கம். கண்கவர் கதிர்மணி கனலும் சென்னியை ; தண்சுடர் உறுபகை தவிர்த்த ஆழியை; ஒலியியல் உவணம் ஓங்கிய கொடியினை; வலிமிகு சகடம் மாற்றிய அடியினை.

வை நாற்சீர் ஓரடி நான்கு அம்போ தரங்கம்.

போரவுணர்க் கடந்தோய் நீ ;

புணர்மருதம் பிளந்தோய் நீ; நீரகலம் அளந்தோய் நீ;

நிழல்திகழும் படையோய் நீ.

இவை முச்சீர் ஓரடி நான்கு அம்போ தரங்கம்.

ஊழி நீ ;

உலகும் நீ ;

உருவும் நீ ;

அருவும் நீ ;

ஆழி நீ ;

அருளும் நீ;

அறமும் நீ ;

மறமும் நீ .

229