உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

நாம்பிரியோம் அணியென்று நறுநுதலைப் பிரிவாயேல் ஓம்பிரியோம் என்றநின் உயர்மொழியும் பழுதாமோ?

குன்றளித்த திரள்தோளாய் கொய்புனத்துக் கூடியாநான் அன்றளித்த அருள்மொழியால் அருளியதும் அருளாமோ? சில்பகலும் ஊடியக்கால் சிலம்பொலிச்சீ றடிபரவிப் பல்பகலும் தலையளித்த பணிமொழியும் பழுதாமோ?

இவை ஆறம் தாழிசை.

அதனால்,

இது தனிச்சொல்.

அரும்பெறல் இவளினும் தரும்பொருள் அதனினும் பெரும்பெறல் அரியன; வெறுக்கையும் அற்றே; விழுமிய தறிமதி அறிவாம்

கழுமிய காதலில் தரும்பொருள் சிறிதே.

து சுரிதகம்.

243

-யா. வி. 86 மேற்.

இது தரவு ஒன்றாய்த் தாழிசை ஆறாய் வந்த கொச்சகக் கலிப்பா. இது பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா எனப் பெயர் பெறும்.

(மயங்கிசைக் கொச்சகம்)

மணிகிளர் நெடுமுடி மாயவனும் தம்முனும்போன் றணிகிளர் நெடுங்கடலும் கானலும் தோன்றுமால் நுரைநிலந் தவையன்ன நொப்பறைய சிறையன்னம் இறைநயந் திறைகூரும் ஏமஞ்சார் துறைவகேள் :

வரையென மழையென மஞ்செனத் திரைபொங்கிக் கரையெனக் கடலெனக் கடிதுவந் திசைப்பினும் விழுமியோர் வெகுளிபோல் வேலாழி இறக்கில்லா தெழுமுந்நீர் பரந்தோங்கும் ஏமஞ்சார் துறைவகேள்!

இவை இரண்டும் தரவு.

கொடிபுரையும் நுழைநுசுப்பிற் குழைக்கமர்ந்த திருமுகத்தோள் தொடிநெகிழ்ந்த தோள்கண்டும் துறவலனே என்றியால் ; கண்கவர் மணிப்பைம்பூண் கயில்கவைய சிறுபுறத்தோள் தெண்பனிநீர் உகக்கண்டும் தெரியலனே என்றியால் ;