248
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
ள்.) ஒப்பற்ற நான்கு சீர்களால் நடந்த அடியின் தொகை நான்கு ஆகி அமைந்தவையெல்லாம் அழகான் நிரம்பிய கலிவிருத்தம் என்று கூறப்பெறும் என்றவாறு.
கலியின் துள்ளல் நடையின் அழகு கருதிக் ‘காரிகை சான்ற கலி' என்றார்.
நாற்சீரான் என்னாமல் ‘நாலொரு சீரான்' என்ற விதப்பி னால், கலித்தளை தவறாது நாற்சீர் நாலடியான் வருவன தரவு கொச்சகக் கலிப்பா என்று வழங்கப்பெறும் எனக் கொள்க.
(எ - டு.)
(கலிவிருத்தம்)
வானகத் திளம்பிறை வளர வையக
மீனகத் திருள்கெட இன்ப மெய்துமே
நானகக் குழலிநீ வளர நங்குடி
தானகத் திருள்கெடத் தயங்கு கின்றதே.
சூளாமணி. 224.
இது விளம் விளம் மா விளம் என்னும் யாப்புறவில் வந்த கலி விருத்தம்.
(கலிவிருத்தம்)
“புலவர் சொல்வழி போற்றில னென்பதோர்
அலகில் புன்சொலுக் கஞ்சுவ னல்லதேல்
உலக மொப்பவு டன்றெழு மாயினும்
மலைவன் மற்றதன் கண்மதிப் பில்லையே
சூளாமணி. 640.
இது மா விளம் விளம் விளம் என்னும் யாப்புறவில் வந்த கலி விருத்தம்,
(கலிவிருத்தம்)
“பூத்தலை வாரணப் போர்த்தொழில் இளையவர்
நாத்தலை மடிவிளிக் கூத்தொடு குயில்தரக்
காய்த்துறு தமனியத் துகளொடு கடிகமழ்
பூத்துகள் கழுமிய பொலிவின தொருபால்”
-சீவகசிந்தாமணி 120.
இது விளம் விளம் விளம் கருவிளம் என்னும் யாப்புறவில்
வந்து 'புளிமா' வாக முடிந்த கலிவிருத்தம்.