உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

251

உடையதாய் ஏகாரத்தான் முடிவது கட்டளைக் கலித்துறை எனப்பெறும். என்னை?

66

அடியடி தோறும் ஐஞ்சீர் ஆகி

முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாக்

கடையொரு சீரும் விளங்காய் ஆகி நேர்பதி னாறே நிரைபதி னேழென்

றோதினர் கலித்துறை ஓரடிக் கெழுத்தே”

என்றார் ஆகலின்.

(கட்டளைக் கலித்துறை)

“சிந்தா மணிதெண் கடலமிர் தந்தில்லை யானருளால் வந்தா லிகழப் படுமே மடமான் விழிமயிலே !

அந்தா மரையன்ன மேநின்னை யானகன் றாற்றுவனோ சிந்தா குலமுற்றென் னோவென்னை வாட்டந் திருத்துவதே’

وو

-திருக்கோவையார். 12.

நேரசையால் தொடங்கிய இச் செய்யுட்கு ஒற்றுநீக்கி அடி தோறும் பதினாறு எழுத்தாதல் அறிக.

(கட்டளைக் கலித்துறை)

“தெளிவளர் வான்சிலை செங்கனி வெண்முத்தம் திங்களின்வாய்ந் தளிவளர் வல்லியன் னாய்முன்னி யாடுபின் யானளவா ஒளிவளர் தில்லை யொருவன் கயிலை யுகுபெருந்தேன் துளிவளர் சாரற் கரந்துங்ங னேவந்து தோன்றுவனே’

-திருக்கோவையார். 16. நிரையசையால் தொடங்கிய இச் செய்யுள் ஒற்று நீக்கி அடி தோறும் பதினேழு எழுத்தாதல் அறிக. கட்டளைக் கலித் துறைக்கு ஓதிய இலக்கணம் அனைத்தும் இவற்றின்கண் இட ம் பெற்றிருத்தலும் கண்டு கொள்க.

கலித்தாழிசை

81. அந்தடி மிக்குப் பலசில வாயடி

தந்தமில் ஒன்றிய தாழிசை ஆகும்.

-யா. வி. 87 மேற்.

-யா. கா. 33 மேற்.

இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான்

கலித் தாழிசை யாவது இன்னது என்பது கூறிற்று.