உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

'குறளடி நான்மையிற் கோவை மூன்றாய் வருவன வஞ்சித் தாழிசை ; தனிவரில் துறையென மொழிப துணிந்திசி னோரே

என்றார் அமித சாகரனார்.

(வஞ்சித்தாழிசை)

66

'இரும்பிடியை இகல்வேழம்

பெருங்கையால் வெயில்மறைக்கும்

அருஞ்சுரம் இறந்தார்க்கே

விரும்புமென் மனனே காண் ;”

“மடப்பிடியை மதவேழம்

தடக்கையால் வெயில்மறைக்கும்

இடைச்சுரம் இறந்தார்க்கே நடக்குமென் மனனே காண் ;

“பேடையை இரும்போத்துத்

தோகையால் வெயில்மறைக்கும்

காடகம் இறந்தார்க்கே

ஓடுமென் மனனேகாண்'

-யா. வி. 91.

-யா. வி. 91, 95 மேற்.

-யா. கா. 34 மேற்.

இவை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வந்தமையால் வஞ்சித்

தாழிசை.

(வஞ்சித்தாழிசை)

“பிணியென்று பெயராமே

துணிநின்று தவஞ்செய்வீர் !

அணிமன்ற லுமைபாகன்

மணிமன்று பணியீரே’

“என்னென்று பெயராமே கன்னின்று தவஞ்செய்வீர் !

நன்மன்ற லுமைபாகன் பொன்மன்று பணியீரே”