282
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
(நேரிசை வெண்பா)
“காதுசேர் தாழ்குழையாய் கன்னித் துறைச்சேர்ப்ப போதுசேர் தாழ்மார்ப ! போர்ச்செழிய-நீதியால் மண்அமிர்தம் மங்கையர்தோள் மாற்றாரை எற்றார்க்கு நுண்ணிய வாய பொருள்"
-யா. வி. 95 மேற். -நேமி. 93 மேற்.
சேர்ப்ப,மார்ப, செழிய, நீதியால் மண்கா ; அமிர்தம் து ; மங்கையர்தோள் சேர் ; மாற்றாரைத் தாழ் ; ஏற்றார்க்குக் குழை ; நுண்ணியவாய பொருள் ஆய் என இயைத்து வினை நிரல் நிறையாதல் காண்க. முறை நிரல் நிறை :
66
(குறள் வெண்பா)
முறிமேனி ; முத்தம் முறுவல் ; வெறி நாற்றம் ;
வேலுண்கண் ; வேய்த்தோள் ; அவட்கு
-திருக். 1113
சொல்லும் பொருளம் முறையே இயைந்து நின்றமையால் முறை நிரல் நிறையாதல் காண்க.
எதிர் நிரல் நிறை :
(குறள் வெண்பா)
66
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்
-திருக். 410.
விலங்கொடு மக்கள் என எடுத்துக் கற்றாரோடு ஏனையவர் என முடிப்பினும், விலங்கு ஏனையவர்; மக்கள் கற்றார் என இயைத்துக் கொள்ளப் பெறுதலால் எதிர் நிரல் நிறையாதல் காண்க. மயக்க நிரல் நிறை:
66
(இன்னிசை வெண்பா)
கண்ண் கருவிளை ; கார்முல்லை கூரெயிறு பொன்ன் பொறிசுணங்கு போழ்வாய் இலவம்பூ மின்ன் நுழைமருங்குல் ; மேதகு சாயலாள் என்ன் பிறமகளா மாறு"
-யா. வி. 3, 95 மேற்.