உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

13

66

என்னை?

வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும்

வேங்கடங் குமுரி தீம்புனற் பௌவமென் றந்நான் கெல்லை அகவயிற் கிடந்த நூலதின் முறையே வாலிதின் விரிப்பின்

எனவும்,

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து

எனவும், காக்கைபாடினியாரும் தொல்காப்பியத்துக்குச் சிறப்புப் பாயிரம் கூறிய பனம்பாரனாரும் சொன்னாராகலின்” என்பது இறையனார் அகப்பொருளுரை.

தொல்காப்பியனார் செய்யுள் உறுப்புக்களை முப்பத்து நான்காகக் கொண்டார். காக்கைபாடினியம் நூல் வடிவில் கிடைக்காமையாலும், செய்யுள் உறுப்பெண்ணிய நூற்பா மேற்கோள் ஆட்சி வழியால் கிட்டாமையாலும் செய்யுள் உறுப்புக்கள் எத்துணை என்று கொண்டார் என்று புலப்பட வில்லை. யாப்பருங்கலம் யாப்பருங்கலக்காரிகைகளை இயற்றிய ஆசிரியர். அமிதசாகரனார் செய்யுள் உறுப்புக்களை எண்ணுதற்குப் பல்காயனார் மதத்தை மேற்கொண்டார் என்பது புலனாகின்றது. காக்கைபாடினியார் மதம் தெற்றெனப் புலனாகவில்லை.

ஆசிரியர் தொல்காப்பியனார் தளை என்பதோர் உறுப்பைக் காண்டிலர். காக்கைபாடினியார்க்கும் தளை என்பதோர் உறுப்பு உடன்பாடன்று என்பது பேராசிரியர் உரையானும் நச்சினார்க்கினியர் உரையானும் (செய்.1) நன்கு விளங்கும். சிறுகாக்கை பாடினியார் தளையென்னும் உறுப்பைக் கொண்டவர் என்பதும் வெளிப்படுகின்றது.

"தளை உறுப்பெனப்படாது. எழுத்தும் அசையும்போல் யாண்டும் வருவன எல்லாம் உறுப்பெனப்படுவன என்றதற்கு, "இணைநூன் முடிபு தன்னூன் மேற்றே”

என்பதனால் காக்கை பாடினியார் ஓதிய தளை இலக்க ணம் ஈண்டுக் கோடல் வேண்டும் எனின், அதுவே கருத்தாயின் அவர்க்கும் இவர் முடிபே பற்றித் தளை களையல் வேண்டும். அல்லதூஉம் இவர்க்கு இளையரான காக்கை பாடினியார் தளை கொண்டிலரென்பது இதனாற் பெற்றாம். தளை வேண்டினார் பிற்காலத்து ஓராசிரியர் என்பது. என்னை?