290
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
(கலிவிருத்தம்)
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன்னடி யேனையும் தாங்குதல் என்க டன்பணி செய்து கிடப்பதே
_
- தேவாரம் 5.19:9
இதனை ‘நம் கடம்பனை, தென் கடம்பை, தன் கடன் அடியேனையும், என் கடன் பணிசெய்து கிடப்பதே என அல கிடின் கலிவிருத்த யாப்புறவு அழிதல் அறிக. இவ்வாறே பிறவும் கொள்க.
7. வனப்பு
வனப்பு என்பது பல
உறுப்பும் திரண்டவழி வழி உண் டாவதோர் அழகு. அதுபோல் பல செய்யுளும் உறுப்பாய்த் திரண்ட தொடர்நிலைக் கண்ணே உண்டாவது வனப்பு எனக் காரணக் குறி பெற்றது. அவை அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என எட்டாம்.
1. அம்மை: சிலவாகிய மெல்லி சொற்களால் சீரிய பொருள் தரும் வண்ணம் சொல்வது. என்னை?
“வனப்பியல் தானே வகுக்கும் காலைச்
சின்மென் மொழியாற் சீர்புனைந் தியாப்பின் அம்மை தானே அடிநிமிர் பின்றே'
-தொல். சொல். செய். 233.
என்றார் ஆகலின். “அம்மை என்பது குணப்பெயர் ; அமைதிப் பட்டு நிற்றலின் அம்மை ஆயிற்று' என்றார் பேராசிரியர். (தொல். செய். 233.)
(குறள் வெண்பா)
“உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்’
-திருக். 294.
2. அழகு: செய்யுட் சொல்லாகிய திரி சொல்லால் ஓசை இனிதாக இயற்றப் பெறுவது அழகு எனப்பெறும். என்னை?