294
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்
போய்எடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?
-பாவேந்தர்.
என்றும் வரும். இவை, புலன் என்னும் வனப்பாதல் அறிக.
8. இழைபு : வல்லொற்று வாராமல் செய்யுளியல் உடை யாரால் எழுத்து எண்ணி வகுக்கப் பெற்ற குறளடி முதல் கழிநெடிலடி ஈறாகிய ஐந்தடியும் முறையே வருவது இழைபு எனப்பெறும். என்னை?
66
'ஓற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்
தோங்கிய மொழியால் ஆங்ஙனம் ஒழுகின்
இழைபின் இலக்கணம் இயைந்த தாகும்”
-தொல். செய். 240.
என்றார் ஆகலின்.
இதற்கு எடுத்துக்காட்டு, அடி கூறியாங்குக் காட்டிய "பேர்ந்து சென்று” என்னும் பாட்டாதல் அறிக.
8. வண்ணம்
அழகு, குணம், சந்தம், சாதி, நிறம், முடுகியல், விதம் முதலிய பலபொருள் தரும் ஒரு சொல் வண்ணம் என்பது. வண் ‘சந்தம்' என்னும் பொருள் குறித்து வந்தது. வண்ணம் இருபது என்பார் தொல்காப்பியனார். என்னை?
“வண்ணம் தானே நாலைந் தென்ப”
என்றும்,
66
'அவைதாம்,
பாஅ வண்ணம் தாஅ வண்ணம்
வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம்
இயைபு வண்ணம் அளபெடை வண்ணம் நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம் சித்திர வண்ணம் நலிபு வண்ணம் அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம் ஒழுகு வண்ணம் ஒரூஉ வண்ணம் எண்ணு வண்ணம் அகைப்பு வண்ணம்
தூங்கல் வண்ணம் ஏந்தல் வண்ணம்