காக்கை பாடினியம்
21
மதிக்குங் கலைக்காக்கை பாடினி” என்பது கொண்டு இவரின் வேறாகக் ‘கலைக்காக்கை பாடினி' என்பார் ஒருவர் இருந்தார் என்று கொள்ளவும் இடந்தருமன்றோ!
காக்கை பாடினியார்க்குப் பின்னே அப்பெயருடன் மற்றொருவரும் விளங்கினார். அவரும் யாப்பிலக்கணம் செய்தார். இவர்க்கும் அவர்க்கும் வேறுபாடு அறிதல் வேண்டிய சான்றோர் அவரைச் சிறுகாக்கை பாடினியார் என்று வழங்கினர். அவர் செய்த நூல் சிறுகாக்கை பாடினியம் என்று வழங்கப்பெற்றது. காக்கை பாடினிய நூற்பாக்களும், குறிப்புக்களும் தொல் காப்பிய இளம்பூரணர் உரை, பேராசிரியர் உரை, சேனா வரையர் உரை, நச்சினார்க்கினியர் உரை ஆகியவற்றிலும், நன்னூல் மயிலை நாதர் உரை, இறையனார் களவியல் உரை, வீரசோழிய உரை ஆகியவற்றிலும் அருகிக் காணப்பெறு கின்றன. யாப்பருங்கலக் காரிகை உரை, யாப்பருங்கல விருத்தியுரை ஆகிய இரண்டனுள்ளும் மிகப் பலவாக எடுத்தாளப் பெற்றுள. அவற்றுள் கீழ்வரும் நூற்பாக்கள் இக்காக்கை பாடினியத்தில் இணைத்து உரை எழுதப்பெற்றில.
“ஓங்கெழில் முதலா"
எனத் தொடங்கும் நூற்பா மயிலை நாதரால் காட்டப்பெறுகின்றது. அது முன்னே குறிப்பிடப் பெற்றது. அந் நூற்பா இணைக்கப் பெற்றிலது.
“வெண்சீர் ஒன்றின் வெண்டளை கொளா அல்”
என்பதும்
“வெண்சீர் ஒன்றினும் வெண்டளை யாகு மின்சீர் விரவிய காலை யான
என்பதும் செய்யுளியலில் (55) பேராசிரியரால் எடுத்தாளப் பெற்றுள. இவ்விரு நூற்பாக்களும் இந்நூற்பாவின் உரையில் நச்சினார்க்கினியராலும் எடுத்தாளப் பெற்றுள. முன் பின் தொடர்பின்மையால் இவை இணைக்கப் பெற்றில.
“வெண்சீர் இறுதியின் நேரசை பின்வரின் வெண்சீர் வெண்டளை ஆகும் என்ப
99
-யா.கா.10 மேற்.
என்னனும் நூற்பா டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள் நூல் நிலையக் காரிகை வெளியீட்டிலும், பெரும்புலவர் மே.வீ. வேணு கோபாலப் பிள்ளை அவர்கள் பதிப்பிலும் காக்கை பாடினியார் நூற்பாவாகக் காட்டப் பெற்றுள்ளது. காக்கை பாடினியார் மதம்