காக்கை பாடினியம்
“உயிரள பெடையும் ஒற்றள பெடையுமென் றாயிரண் டென்ப அளபெடை தானே”
29
-யா. வி. 2. மேற்
என்றார் ஆகலின். அளபு எனினும் அளபெடை எனினும் ஒக்கும்.
உயிரளபெடையாவது உயிர் எழுத்து அளபெடுப்பது. உயிர் எழுத்துக்களில், “நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொரு மொழி” யாகலின் அவை அளபெடுக்கும் என்ப. அவை அள பெடுக்குங்கால் ஆ, ஈ, ஊ, ஏ, ஏ, ஓ என்னும் ஐந்தும் தமக்கு னமாகிய அ, இ, உ, எ, என்னும் ம் ஐந்து குற் றெழுத்துக்களோடும் அளபெடுக்கும். ஐகாரம் இகரத்
தோடும், ஒளகாரம் உகரத்தோடும் அளபெடுக்கும். என்னை?
“குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கம் நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே’
“ஐ ஒள வென்னும் ஆயீ ரெழுத்திற் கிகர வுகரம் இசைநிறை வாகும்
என்றார் ஆகலின்.
-தொல். எழுத்து. 41-2.
உயிரளபெடை நான்கு வகைப்படும். அவை, தனிநிலை, முதல்நிலை, இடைநிலை, இறுதிநிலை என்பன. என்னை? தனிநிலை முதனிலை இடைநிலை ஈறென நா நால்வகைப் படூஉமா பாய் வருமிடனே
யா.க.4.மேற் யா.க.வி.2. மேற்
அவை வருமாறு:
ஒளஉ-நெட்டெழுத்து
ஆஅ, ஈஇ, ஊஉ, எஏ, ஐஇ, ஓஒ, ஔஉ-நெட் ஏழும் தனிநிலை அளபெடையாய் வந்தன.
பாஅரி, கீஇரை, ரை, கூஉரை, ஏஎரி, தைஇயல், ஓஒரி, ஔஉவை-நெட்டெழுத்து ஏழும் முதல்நிலை அளபெடையாய்
வந்தன.
படாஅகை, பரீஇகம், கழூஉமணி, பரேஎரம், வளை இயம்; புரோஒசை, மனௌஉகம்-நெட்டெழுத்து ஏழும் இடைநிலை அளபெடையாய் வந்தன.
படாஅ, குரீஇ, கழூஉ, விலோசு, விரைஇ, நிலோஒ, அனௌஉ-நெட்டெழுத்து ஏழும் இறுதிநிலை அளபெடையாய்
வந்தன.