34
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
ஒளகாரம் மொழி முதல் அன்றி, இடை, கடை
வாரா.
(எ
-
டு) ஔவை ; கௌவை.
இடங்களில்
ை மையோடு ஆய்தம்’ என்றும், ‘குறுக்கமோடு என்றும் இரண்டு ‘ஓடு' கொடுத்துப் பிரித்தார், ஆய்தம் தனித்து வாராமையாலும், மொழி முதல் கடை இடங்களில் வாராமை யாலும், மெய்யெழுத்துடன் கூடி வாராமையாலும், அஃது உயிரெழுத்து அன்று என்றும் ; உயிர் ஏறுதற்கு இடம் தாராமை யாலும் மெய்போல மொழிமுதல் ஈறுகளில் வாராமையாலும் மெய்யெழுத்து அன்று என்றும்; உயிர் எனவும் மெய்யெனவும் ஆகாதவொரு தனிநிலை யெழுத்து அஃது என்பது அறி வித்தற்கும் ; குற்றியலிகரம் முதலிய மூன்றும் வரிவடிவால் இகரம் முதலியவற்றொடு வேற்றுமை இல்லா தவை எனினம் ஒலியளவால் வேறுபாடுடையன என்று அறிவித்தற்கும் என்க. னிக் குற்றியலிகர உகரங்கள் புள்ளி புள்ளி பெறும் என்பார் உளராயினும் இதனால் கொள்க.
அசைக்கு உறுப்பு' எனினும் அமையுமாக ‘அசைக்கு உறுப்பாகும்' என விரித்துக் கூறியமையால், இவற்றினும் மிகுத்தும் குறைத்தும் உறுப்பு எண்ணினாரும் உளரெனக் கொள்க. என்னை?
“உயிரே மெய்யே உயிர்மெய் என்றா குறிலே நெடிலே அளபெடை என்றா வன்மை மென்மை இடைமை என்றா சார்பில் தோன்றும் தன்மைய என்றா ஐ ஔ மகரக் குறுக்கம் என்றாங்
கைம்மூ வெழுத்தும் ஆம் அசைக் குறுப்பே”
என்றார் அமித சாகரனார்.
"குறிய நெடிய உயிருறுப் புயிர்மெய் வலிய மெலிய இடைமை அளபெடை
-
யா. வி. 2.
மூவுயிர்க் குறுக்கமும் ஆமசைக் கெழுத்தே”
யா. வி. 2. மேற்.
என்றார் சிறுகாக்கை பாடினியார்.
எழுத்தும் சொல்லும் கற்றாரன்றே யாப்பிலக்கணம் கற்பர்; அவ்வாறாகவும் அவர் அவ்வெழுத்துக்களை அறிதல் வேண்டுமோ? எனின், வேண்டும் என்க. என்னெனின், ஆண்டுக்