உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

காக்கை பாடினியம்

ஈரசைகூடிய சீரியற் சீரவை

ஈரிரன் டென்ப இயல்புணர்ந் தோரே”

என்றார் அமிதசாகரனார் ஆகலின்.

(நேரிசை ஆசிரியப்பா)

55

-யா. வி. 11.

“நீல மேனி வாலிழை பாகத்

தொருவன் இருதாள் நிழற்கிழ்

மூவகை யுலகு முகிழ்த்தன முறையே”

-ஐங்குறு. கடவுள்.

இவ்வகவற் கண்ணும்,

66

(குறள் வெண்பா)

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு.

இக்குறள் வெண்பாவின் அமைந்துள்ளமை அறிக.

99

கண்ணும்

-திருக். 23.

ஈரசைச்சீர் நான்கும்

‘ஈரசைச் சீரியற்சீர்' எனின் அமையும் ; 'ஓரோ அகையினால் ஆகிய' என்று விரித்துக் கூறவேண்டியதென்னை? எனின், இவ் வீரசை நாற்சீர் ஒலி, எடுத்தல் படுத்தல் துள்ளல் தூங்கல் முதலிய வேறுபாடு மிக்கின்றி ஓர் ஒழுங்குபெற இயன்று செல்வது என்பது அறிவித்தற்கு என்க.

இனி, இயற்சீரை முற்படக் கூறியது என்னை? எனின், அசை இன்னதென முன்னைக் கூறியவர், அவ்வசையால் ஆம் சீர் கூறுவாராய் அச்சீர் எண்ணுமுறையால் ஈரசை முதலாக எண்ணி இயற்சீர் கூறினார். அன்றியும் இயற்சீர் என்னும் அளவுகோல் கொண்டு அன்றே அதனினும் வேறுபட்டுச் செப்பியும் துள்ளியும் தூங்கியும் வரும் சீர்களை அறிதல் இயலும் ஆகலின் என்றுமாம்.

இயற்சீர்க்கு மேலுமொரு பெயர்

9. இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர்.

-யா. வி. 11 மேற்.

இந்நூற்பா என்ன கூறிற்றோ எனின் மேலே இயற்சீர் எனக் கண்ட வை இப்பெயராலும் அழைக்கப்பெறும் என்பது கூறிற்று.