உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

நேர்நேர்நேர் - தேமாங்காய் நிரைநேர்நேர் - புளிமாங்காய்

நிரைநிரைநேர் - கருவிளங்காய்

நேர்நிரைநேர் - கூவிளங்காய்

என்பன. இணையசையாய் இறும் நான்கும் கனிச்சீர்கள்.

அவை;

என்பன.

நேர்நேர்நிரை - தேமாங்கனி

நிரைநேர்நிரை - புளிமாங்கனி

நிரைநிரைநிரை - கருவிளங்கனி நேர்நிரைநிரை - கூவிளங்கனி

57

கலிப்பாவிற்குரிய சீர் இன்னவெனக் கூறாரோ? எனின் வெண்பா உரிச்சீராய காய்ச்சீரே கலிப்பாவிற்கும் உரியவாகலின் கற்போர்க்கு உணர்வு பெருக்கல் வேண்டித் தழுவிக்கொள்ள வைத்தார் என்க.

(குறள் வெண்பா)

"மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த விடத்து”

என்றும்,

(குறள் வெண்பா)

“உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ்

என்றும்,

(நேரிசை வெண்பா)

-திருக். 968.

-திருக். 1079.

“பொன்னார மார்பிற் புனைகழற்கால் கிள்ளிபேர் உன்னேனென் றூழுலக்கை பற்றினேற்-கென்னோ மனனோடு வாயெல்லாம் மல்குநீர்க் கோழிப் புனனாடன் பேரே வரும்”

யா. வி. 12 மேற்.

-யா. க. 9 மேற்.

என்றும் வரும் இவற்றுள் வெண்பா உரிச்சீர் நான்கும் வந்தன.