64
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
த் தரவு கொச்சகக் கலிப்பாவுள் நேரீற்று இயற்சீர் வாராமை
காண்க.
'கலியொடு வஞ்சி' என்னாது ‘வஞ்சி மருங்கின்' என்றார். அதனால் வஞ்சிப்பாவின் இறுதியில் நேரீற் றியற்சீர் வாராது எனக் கொள்க. என்னை? 'பிற நூன் முடிந்தது தானுடன் படுதல்' என்பது தந்திர உத்தியாகலின்.
66
(குறளடி வஞ்சிப்பா)
'பானல்வாய்த் தேன்விரிந்தன ;
கானல்வாய்க் கழிமணந்தன ;
ஞாழலொடும் நறும்புன்னை ;
தாழையொடு முருகுயிர்ப்ப
வண்டல்வாய் நறுநெய்தல்
கண்டலொடு கடலுடுத்துத்
தவளமுத்தம் சங்கீன்று
பவளமொடு ஞெமர்ந்துராஅய் இன்னதோர்,
கடிமண முன்றிலும் உடைத்தே
படுமீன் பரதவர் பட்டினத் தானே'
-யா. வி. 26, 90 மேற்.
க்குறளடி வஞ்சியுள் நேரீற்றியற்சீர் வாராமை காண்க.
(குறளடி வஞ்சிப்பா)
“தேந்தாட் டீங்கரும்பின்
பூந்தாட் புனற்றாமரை
வார்காற் செங்கழுநீர்"
-யா. வி. 15, 94 மேற்.
க்குறளடி வஞ்சியுள் நேரீற்றியற்சீர் அடி ஈற்றில் வாராமை
காண்க.
நேரீற்றியற்சீர் கலியுள்ளும், வஞ்சியுள்ளம் வாரா வென யாப்பருங்கல முடையார் கூறிற்றிலர் ஆகலின் "நேரீற்றியற் சீர்”ஒத்தாழிசைக் கலிப்பாவுள்ளும், வஞ்சிப்பாவின் இறுதியினும் வரப்பெறா" என்பதை உரையிற் கோடலால் விருத்தியுடையார் கொண்டார்.