உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

71

இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் முன்னே கூறிய நாலசைப் பொதுச்சீர் செய்யுட்கண் நிற்குமாறு இதுவெனக் கூறிற்று.

6)

- ள்.) வஞ்சிப்பாவினுள் ஓரடிக்கண்ணே நாலசைப் பொதுச்சீர்கள் இரண்டு இணைந்து நிற்றலும், பிற பாக்களுள் ஓரடிக்கண் ஒன்றே நிற்றலும் ஆகும் என்று புலவோர் கூறுவர். அன்றியும் இறுதி இணையசையாகிய நாலசைப் பொதுச்சீர்கள் வஞ்சிப்பாவிற்கே உரியன என்றும் கூறுவர்.

வஞ்சிப்பா ஒன்றனையுமே குறித்துப் பிற பாக்களை ‘ஏனுழி' என்றாரேனும், வெண்பாவினுள் நாலசைச்சீர்கள் வாரா ; ஆசிரியத்துள் குற்றியலுகரம் வருமிடத்தன்றி வார; கலியுள்ளும் பெரும்பான்மையும் குற்றியலுகரம் வருமிடத்தன்றி வாரா ; பாவின் அளவு பாவினத்துள் பயின்று வாரா எனக் கொள்க.

(குறளடி வஞ்சிப்பா)

“செங்கண்மேதி கரும்புழக்கி

அங்கண்நீலத் தலரேந்தி

பொழிற்காஞ்சி நிழற்றுயிலும்

செழுநீர்,

நல்வயல் கழனி ஊரன்

புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே”

இக்குறளடி வஞ்சிப்பாவினுள் ‘செங்கண்மேதி' கண் நீலம்' எனவும் நாலசைச்சீர்கள் வந்தன.

66

'அள்ளற்பள்ளத் தகன்சோணாட்டு வேங்கைவாயில் வியன்குன்றூரன்

-யா. வி. 15 மேற்.

-யா. கா. 15 மேற். எனவும் ‘அங்

-யா. வி. 15 மேற். -யா. கா. 9 மேற்.

இவ்வஞ்சியுள் நாலசைப் பொதுச்சீர் கண்ணுற்று நின்றன.

66

(நேரிசை ஆசிரியப்பா)

'அந்தண் சாந்தமோ டகில்மரம் தொலைச்சிச் செந்துசிதைய உழுத செங்குரற் சிறுதினைப்