உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

81

ஓரசைப் பொதுச்சீரை இயற்சீரே போலாகக் கொண்டு வருஞ்சீர் முதலசையோடு ஒன்றியதை ஆசிரியத் தளையாகவும், ஒன்றாததை இயற்சீர் வெண்டளையாகவும் கொள்க. என்னை?

நேரிற நேர்வரின் வெண்டளை யாகுமந் நேரிற்ற சீர்ப்பின் நிரைவரின்-ஓரும்

கலித்தளையாம் பால்வகையால் வஞ்சித் தளையாம்

நிரைவரினும் நாலசைச்சீர்க் கண்.

என்றும்,

“ஓரசைப் பொதுச்சீர் ஒன்றா தாயின்

வெண்டளை ; ஒன்றிய தாசிரியத் தளையே”

என்றும் சொன்னார் ஆகலின்.

-யா. வி. 21 மேற்.

-யா. வி. 21 மேற்.

“அங்கண்வானத் தமரரரசரும்”

-கா. பா. 14 மேற்.

என்னும் பாடலுள்,

“வெங்களியானை வேல்வேந்தரும்”

என நேரீற்று நாலசைச்சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு ஒன்றியதால் வெண்டளையும்,

66

“கடிமலர்ஏந்திக் கதழ்ந் திறைஞ்சி”

என நேரீற்று நாலசைச்சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு ஒன்றாமையால் கலித்தளையும்,

66

“மந்தமாருதம் மருங்கசைப்ப

99

என நிரையீற்று நாலசைப் பொதுச்சீர் நின்று வருஞ்சீர் முதலசை யோடு ஒன்றியமையால் ஒன்றிய வஞ்சித்தளையும்,

66

'அந்தரதுந்துபி நின்றியம்ப”

என நிரையீற்று நாலசைப் பொதுச்சீர் நின்று வருஞ்சீர் முத லசையோடு ஒன்றாமையால் ஒன்றாத வஞ்சித்தளையும் ஆகிய வாறு காண்க.

“உரிமையின்கண் இன்மையால்”

என்னும் வஞ்சி விருத்தத்துள்,

66

“அரிமதர் மழைக் கண்ணாள்'

99

-கா. பா. 14 மேற்.