உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ல்

களவியற் காரிகை

87

21. மடல் வெளிப்படுத்தல் என்பது இவ்வகை யுலகினி' (யல் கூறி ஆற்றானாகிய தலைவன் தான் மடலேறப் போதலை வெளிப்படுத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(254) “கழிகின்ற வென்னையும் நின்றநின்

கார்மயில் தன்னையும்யான் கிழியொன்ற நாடி யெழுதிக்கைக் கொண்டேன் பிறவிகெட்டின்

றழிகின்ற தாக்கிய தாளம்

பலவன் கயிலையந்தேன் பொழிகின்ற சாரனுஞ் சீறூர்த்

தெருவிடைப் போதுவனே”

(255) "பொருநெடுந் தானைப்புல் லார்தம்மைப்

பூலந்தைப் போர்தொலைத்த

செருநெடுஞ் செஞ்சுடர் வேல்நெடு

மாறன்தென் னாடனையாய்

அருநெடுங் காமம் பெருகுவ

தாய்விடின் ஆடவர்கள்

கருநெடும் பெண்ணைச்செங் கேழ்மட

லூரக் கருதுவரே”

- திருக்கோவையார் 76.

- பாண்டிக்கோவை 93.

22. மடல் விலக்கல் என்பது மடலேறல் வெளிப்படுத்த தலைவனைத் தோழி நும் அருளால் அது கூடாதென மறுத் துரைத்து விலக்குதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(256) “நடனாம் வணங்குந்தொல் லோனெல்லை

நான்முகன் மாலறியாக்

கடனாம் உருவத் தரன்தில்லை

மல்லற்கண் ணார்ந்தபெண்ணை

உடனாம் பெடையொடொண் சேவலும்

முட்டையுங் கட்டழித்து

1.

மடல் வெளிப்படுத்தல் முதல் தழைகோடல் ஈறாக உள்ள கிளவி விளக்கங்களும் 254 முதல் 271 முடியவுள்ள மேற்கோள் பாடல்களும் புதிதாக இணைக்கப்பெற்றன.