உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இளங்குமரனார் தமிழ்வளம்

(411) “ஏரார் குழல்மட வாளை

யெளியளென் 'றெண்ணிவந்து

தீரா விழுமந்தத் தாய்தென்னன் சேவூர்ச் செருவடர்த்த காரார் களிற்றுக் கழனெடு மாறன் கழல்பணிந்து சேரா வரசரிற் றேய்வா

யளியவென் சிந்தனையே’

(412) "இல்லோன் இன்பங் காமுற் றாஅங் கரிதுவேட் டனையால் நெஞ்சே காதலி நல்ல ளாகுத லறிந்தாங்

கரிய ளாகுதல் அறியா தோயே"

(413) “குணகடற் றிரையது பறைதபு நாரை

2திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை யயிரை யாரிரைக் கணவந் தாங்குச்

சேயள் அரியோட் படர்தி

நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே”

11

பாண்டிக்கோவை 161.

குறுந்தொகை 120.

குறுந்தொகை 123,

(414) “வரிவளைப் பணைத்தோள் மடந்தையை யுள்ளி

3

அரியது நசைஇய நெஞ்சம்

பெரிது மெவ்வம் பெறற்பா லோயே”

பொருளியல் 77.

(415) “அன்னநடைப் பேதை அருமை அறியாதே

யென்னை வருத்துகின்ற தென்கொலோ-துன்னிருட்கண் வஞ்சமே யன்ன மலர்விழியால் ஈடழியும் நெஞ்சமே கட்டுரையாய் நீ”

(416) “குறியெனப் படுவ திரவினும் பகலினும் அறியக் கிடந்த விடமென மொழிப'

1. றுன்னி வந்து. 2. திண்டோட் 3. மு. ப: யரிதின்.

கிளவித்தெளிவு.

இறையனார் அகப்பொருள் 18.