உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இளங்குமரனார் தமிழ்வளம்

12

10. பகைவயிற் சேறல் − 1

பகைவருடை ய நாட்டைக் கொள்ளக் காள்ளக் கருதிப் போர் செய்தற்கு அவர் நாட்டின் மேற்செல்லுதல். வயின்-இடம். செல்லுதல். இச் செயலுக்கு வஞ்சிப்பூச் சூடிச் செல்லுதலின் இது வஞ்சி எனப் பெயர் பெறும்.

சேறல்

-

"வட்கார்மேற் செல்லுதல் வஞ்சி' என்பது இதன்

இலக்கணம்.

நேரிசை வெண்பா

13. வேத்தமர் செய்தற்கு மேற்செல்வான் மீண்டுவந்

என்

தேத்தினர்க் கீத்துமென் றெண்ணுமோ? - பாத்திப் புடைக்கல மான்தேர் உடனீத்தான் ஈத்த

படைக்கலத்திற் சாலப் பல.

(இ-ள்)

பகைவேந்தனொடு

-புறத். 1257

பொருவதற்குப்

படை

கொண்டு செல்லுபவன், போரில் வெற்றிக்கொண்டு மீண்டு வந்த பின்றைத் தன்னை வாழ்த்தியவர்க்கு வேண்டுவ தருவன் று எண்ணுவனோ? முன்னே வீரர்க்கு வழங்கிய படைக் கலத்தினும் மிகப் பலவாகப் பகுக்கப் பெற்ற திரண்ட அணிகலம் ப பூட்டப் பெற்ற குதிரையொடு தேரும் வழங்கினான் என்றவாறு. இ-து:- படையாண்மை, கொடை யாண்மை ஆ ஆ கிய இரண்டையும் இரு கண்ணெனத் தலைவன் கருதினன் என்பது. (வி-ரை) “செல்வான் எண்ணுமோ? படைக்கலத்திற் சாலப் பல மான்தேர் உடனீந்தான்” என என இயைக்க.

வேந்து - வேத்து என வலித்தல் வேறுபாடு பெற்றது. மேற்செல்லுதல் - பகைவயிற் சேறல், மீண்டு வருதல் - போர்க்கண் வென்று மீண்டுவருதல்; பொருதுமடிதல் ஒன்று; அன்றி வென்று வருதல்; என்னும் இரண்டுள் ஒன்றன்றி வேறின்று வீரர்க்கு ஆகலின், 'வென்று வருதல்' என்றாம்.

பாத்தி - பகுக்கப் பெற்ற. ‘பழியஞ்சிப் பாத்தூண் உடைத் தாயின்” என்னும் குறளைக் கருதுக. புடை - திரட்சி. பலவாகப் பகுக்கப் பெற்ற திரண்ட அணிகலம். மான் - குதிரை.

வஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்றான “கொடுத்தல் எய்திய கொடைமை’ இஃதாகும். வேந்தன் போர்க்குச் செல்லு முன் கொடைவழங்குதல்.