உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

“யாப்பென்னும் பொற்பாவை'

"நாகரிகம் இல்லாத மொழிகளிலே மக்களின் நல் லெண்ணங்களைக் காட்டும் சொற்களும், சொற்றொடர்களும் கருமணல்களோடு கலந்து கிடந்த பொற்றுகள்கள் போல், அல்லாத பலவுடன் மயங்கி ஓரொழுங்கு மின்றிச் சிதர்ந்து கிடக்கும். நாகரிகம் அமைந்த மொழியிலோ சிதர்ந்து கிடந்த அச் சொற்களும் சொற் றொடர்களுமாகிய பொற்றுகள் பொறுக்கிச் சேர்க்கப்பட்டு, நல்லிசைப் புலவன் நன்மதிக்குகையில் உருகிச் செய்யுள் என்னும் அச்சிலே வார்க்கப்பட்டு, அளக்கலாகா அழகுமிக்க யாப்பென்னும் பொற்பாவையாய் எழுந்து நின்று விளங்கிக் காண்பார்க்கும் கேட்பார்க்கு மெல்லாம் அழியா இன்பத்தைப் பொழியா நிற்கும். இவ்வியல்பிற்றாய் எழில் நலங்கனிந்த யாப்பானது உயிரையும் உணர்வையும் கரைத்து இன்பவடிவாக்கித் தேன்போல் ஒழுகும் தித்திக்கும் ஓசையின் பல கூறுபாடுகளால் பல பாக்களும் பல பாவினங்களுமாய்ப் பெருகி நிற்கும்.

"வேற்று நாட்டுச் சொற்களும் பொருள்களுமான ஆடை அணிகலன்கள் தன்னை வந்து அணுகப் பெறாமல், தன் தெய்வ வளநாட்டு ஆடை அணிகலன்களையே நமது தண்டமிழ்த்தாய் தன்மேற் கொண்டு பொலிந்த அந்நாளில் அவளது ஆம்பற் செவ்வாயினின்றும் அமிர்தம் ஒழுகினாற்போல் புறம்போந்த வெண்பா அகவற்பா கலிப்பா வஞ்சிப்பா என்னும் இயற்கைச் செந்தமிழ்ப் பாக்கள் பாவினங்களின் அரிய பெரிய அமைதிகளை யெல்லாம் முற்றவெடுத்து முடிய விளக்கும் அருந்தமிழ் நூல் ஒல்காப் பெருமைத் தொல்காப்பியம் ஒன்றுமேயாம்.

L

க்

“தமிழுக்கே சிறப்புரிமை வாய்ந்த பாக்கள் வழங்கிய பண்டைக் காலத்தில் இயற்றப்பட்ட பழந்தமிழ்ச் சீரிய நூலான தொல் காப்பியத்தில் பிற்றை ஞான்று வந்த கலித்துறைகள் விருத்தங்கள் முதலியவற்றின் இலக்கணங்கள் ஒரு சிறிதும் காணப்பட மாட்டா. தமிழுக்கே உரிய பாக்கள் பாவினங்களோடு இப்புதிய பாக்கள் பாவினங்களின் இயல்புகளையும் விளங்க விரித்துரைப்பது யாப்பருங்கல விருத்தி என்னும் இந்நூல் ஒன்றுமேயாம்."

இராவ்பகதூர் ச.பவானந்தம் பிள்ளை அவர்கள்

(யாப்பருங்கல விருத்தி; பதிப்புரை. 1916)