உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

6

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

எனவும் இவை அடிதோறும் இறுவாய் ஒன்றி வந்தமை யான் ; அடி இயைபுத் தொடை.

இனி, அவை எட்டுத் திறத்தானும் வருமாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

“மொய்த்துடன் தவழும் முகிலே பொழிலே;

(இணை)

மற்றதன் அயலே முத்துறழ் மணலே;

(பொழிப்பு)

நிழலே இனியதன் அயலது கடலே;

(ஒரூஉ)

மாதர் நகிலே வல்லே இயலே;

(கூழை)

வில்லே நுதலே வேற்கண் கயலே;

(மேற்கதுவாய்)

பல்லே 'தளவம் ; பாலே சொல்லே;

(கீழ்க்கதுவாய்)

புயலே குழலே மயிலே இயலே; அதனால்,

(முற்று)

இவ்வயின் இவ்வுரு இயங்கலின்,

எவ்வயி னோரும் இழப்பர்தம் நிறையே”

யா. கா. 20. மேற்.

20.மேற்.

இதனுள், இணை இயைபு முதலாகிய ஏழு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டுகொள்க.

"இறுவாய் ஒப்பினஃ தியைபெனப் படுமே”

என்று சிறப்பித்த அதனால், மோனையாய் வந்து இறுவாய் ஒத்தால் “மோனை இயைபு' என்றும், ‘எதுகையாய் வந்து இறுவாய் ஒத்தால் ‘எதுகை இயைபு' என்றும், முரணாய் வந்து

இறுவாய் ஒத்தால் முரண் இயைபு’ என்றும், அள

பெடையாய் வந்து இறுவாய் ஒத்தால் ‘அளபெடை இயைபு' என்றும், பலவாய் வந்து இறுவாய் ஒத்தால் ‘மயக்கு இயைபு’ என்றும், பிற வாராது இறுவாய் ஒத்தால் ‘செவ்வியைபு என்றும் வழங்கப்படும் எனக் கொள்க.

அவற்றுட் சில வருமாறு:

(நிலைமண்டில ஆசிரியப்பா)

“பூந்தண் பொழிலிடை 2வாரணம் துஞ்சும் ; பூங்கண் அன்னை இல்லிடைத் துஞ்சும் ; பூங்கொடிப் புனத்தயற் குறவன் துஞ்சும் ; 3பூசலிக் களவென யாந்துஞ் சலமே'

து மோனை இயைபுத் தொடை.

1. முல்லை. 2. யானை. 3. வருத்தும் களவொழுக்க நினைவால்.

>

- யா. வி. 53. மேற்