உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

(நேரிசை ஆசிரியப்பா)

“அணிநிழல் அசோகமர்ந் தருள்நெறி நடாத்திய மணிதிகழ் அவிரொளி 'வரதனைப் பணிபவர் பவநனி பரிசறுப் பவரே”

என்பது தூங்கிசை அகவல் ஓசை.

66

(நேரிசை ஆசிரியப்பா)

"குன்றக் குறவன் காதல் மடமகள் வரையர மகளிர் 2புரையும் சாயலள் 3ஐயள் அரும்பிய முலையள்

செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே’

என்பது ஒழுகிசை அகவல் ஓசை.

ன்னும் பிறவாற்றான் வருவன:

(நேரிசை ஆசிரியப்பா)

"கொன்னூர் துஞ்சினும் யாம்துஞ் சலமே; எம்மில் அயல தேழில் 'உம்பர்

அணிமிகு மென்கொம் பூழ்த்த

'மயிலடி இலைய மாக்குரல் நொச்சி

மணிமருள் பூவின் °பாடுநனி கேட்டே

291

யா. கா. 5,12. மேற்.

யா. கா. 9. 21. மேற்.

குறுந். 138.

ன்னவை பிறவும் தூங்கிசை அகவல் ஓசை எனப்படும்.

“பொழிலே

7

(நிலைமண்டில ஆசிரியப்பா)

இரவோ ரன்ன இருளிற் றாகியும்,

நிலவோ ரன்ன வெண்மணல் ஒழுகியும்,

அரைசுமணம் நயந்த பந்தர்ப் போலவும்,

வரைவாழ் இயக்கியர் உறைவிடம் போலவும்

'வண்ணனை முற்றா தாகியும், ஒண்ணிழற்

பூவிரி நாற்றம் அன்றியும் ”ஏர்வரக்

குங்குமம் கமழும் எங்கோன் வரையென வியந்தனன் இருந்து வீணை பண்ணி நயந்த கீதம் பாடும் என்ப

வயந்த மாகிய பொழிலி னானே”

இன்னவை பிறவும் ஏந்திசை அகவல் ஓசை எனப்படும்.

1.

அருகபரன். 2. ஒத்த. 3.அழகியள். 4. மேல். 5. மயிலின் அடிபோன்ற இலை 6. வீழ்ந்துபடுதல் “பாடு நனி கேட்டுத் துஞ்சலம்” 7. வருணனை. 8. பொலிவுற. 9. இளவேனில்.