உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“உச்சியார்க் கிறைவனாய் உலகமெலாம் காத்தளிக்கும் பச்சையார் மணிப்பைம்பூண் 'புரந்தரனாப் பாவித்தார் வச்சிரங்கைக் காணாத காரணத்தான் மயங்கினரே; இது தாழிசை.

ஆங்கொருசார்.

இது தனிச்சொல்.

66

‘அக்காலம் அணிநிரைகாத் தருவரையாற் பனிதவிர்த்து 2வக்கிரனை வடிவழித்த மாயவனாப் பாவித்தார் சக்கரங்கைக் காணாத காரணத்தாற் 3சமழ்த்தனரே ;

இது தாழிசை.

ஆங்கொருசார்.

இது தனிச்சொல்.

“மால்கொண்ட பகை தணிப்பான் 'மாத்தடிந்து மயங்காச்செங் கோல்கொண்ட 5சேவலங் கொடியோனாப் பாவித்தார் வேல்கொண்ட தின்மையால் விம்மிதராய் நின்றனரே

இது தாழிசை,

அஃதான்று,

இது தனிச்சொல்.

“கொடித்தேர் *அண்ணல் கொற்கைக் கோமான் *நின்றபுகழ் ஒருவன் செம்பூட் சேஎய்

என்றுநனி அறிந்தனர் பலரே; தானும்

ஐவருள் ஒருவனென் றறியல் ஆகா மைவரை யானை மடங்கா வென்றி மன்னவன் வாழியென் றேத்தத்

தென்னவன் வாழி திருவொடும் பொலிந்தே !”

இது சுரிதகம்.

99

- யா. கா. 32. மேற்.

- வீரசோழியம், யாப்பு, 12, மேற்.

இஃது இடையிடை தனிச்சொல் வந்து, நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவிற் சிறிது வேறுபட்டு, தாழிசை மூன்றேயாய்த் தன்தளையால் வந்த இயற்சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா.

(குறைச்சிஃறாழிசைக் கொச்சகம்)

“மாயவனாய் முற்றோன்றி மணிநிரைகாத் தணிபெற்ற

ஆயநீள் குடையினராய் அரசர்கள் பலர்கூடி

1. இந்திரன். 2. ஓர் அசுரன். 3. மயங்கினர். 4. சூரபன் மாவை அழித்து, 5. முருகன். 6. சிவன். திருமால், நான்முகன், முருகன், இந்திரன்.

(பா. வே) *தொன்றல். *நிறைபுகழ்.