உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

  • பொங்குவால் இளமழை துவைப்ப

மணிநிலா விரியும் குன்றுகிழ வோற்கே” இலக். விளக். 757. மேற்.

எனக் கொள்க.

எண்ணு வண்ணம் என்பது, செவ்வெண்ணினாலும், உம்மை எண்ணினாலும், என எண்ணினாலும், என்றா எண்ணினாலும், பிறவும் யாதானும் ஓர் எண்ணினாலும்

வருவது. என்னை?

“எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும் என்றாராகலின்.

- தொல். செய். 226.

வரலாறு:

(நிலை மண்டில ஆசிரியப்பா)

'பொறையன் செழியன் பூந்தார் வளவன் கொல்லி கொற்கை நல்லிசைக் குடந்தை

பாவை முத்தம் பல்லிதழ்க் குவளை

மாயோள் முறுவல் மழைப்பெருங் கண்ணே

- யா. வி. 95. உரை மேற்.

எனக் கொள்க. இது செவ்வெண் பெற்றது. பிறவும் அன்ன. அகைப்பு வண்ணம் என்பது, அறுத்து அறுத்துச் சொல்லப்படுவது. என்னை?

“அகைப்பு வண்ணம் அறுத்தறுத் தொழுகும்”

என்றாராகலின்.

வரலாறு:

- தொல். செய். 227.

66

(நேரிசை ஆசிரியப்பா)

'தொடுத்த வேம்பின்மிசைத் துதைந்த போந்தை

அடைய அசைத்த ஆர்மலைப் பாட்டூர் அண்ணல் என்போன் இயன்ற சேனை முரசிரங்கும் தானையெதிர் முயன்ற வேந்தருயிர் முருக்கும் வேலி என்னவன்'

எனக் கொள்க.

தூங்கல்

வண்ணம் என்பது,

இலக். விளக். 757.

என்பது, பெரும்பான்மையும்

- தொல். செய். 228.

வஞ்சி பயின்று வருவது. என்னை?

66

"தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும்”

என்றாராகலின்.

(பா. வே) *பொங்குவரல்