உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

(குறள் வெண்பா)

“ஓரெழுத்துக் குன்றின் நிசாத்தாம் ; விராட்டாகும் ஈரெழுத்துக் குன்றும் எனின்,

என்பவாகலின்.

541

(வஞ்சித்துறை)

‘பேடையை இரும்போத்துத்

தோகையால் வெயின்மறைக்கும்

காடகம் இறந்தார்க்கே

ஓடுமென் மனனேகாண்'

((7)

(8)

(7)

(7)

யா. வி. 91. மேற்.

இஃது ஓரடியுள் ஓரெழுத்து மிக்குச் சீர் ஒத்து வந்தமையால்

புரிக்கு.

(கலி விருத்தம்)

றுலவுவர் மெல்லவே ஒண்பொன் மாநகர்

“கலைபயில் அல்குலார் காமர் மஞ்ஞைபோன்

அலர்மலி வீதிகள் ஆறு போன்றுள;

மலையென நிவந்துள மதலை மாடமே

(12)

(12)

(12)

(14)

இஃது இரண்டெழுத்து ஓரடியுள் மிக்குச் சீர் ஒத்து வந்தமை

யால், சுராட்டு.

என்னை?

(குறள் வெண்பா)

“ஓரெழுத்து மிக்காற் புரிக்காம் ; சுராட்டாகும்

ஈரெழுத்து மிக்க தெனின்”

என்பவாகலின்.

(வஞ்சித்துறை)

“மல்லன்மா மழையார்ப்பக் கொல்லைவாய்க் குருந்திளகின; முல்லைவாய் முறுவலித்தன; செல்வர்தேர் வரவுண்டாம்’

66

(7)

(9)

(9)

(7)

இது முதலடியும் நான்காம் அடியும் எழுத்துக் குறைந்து, நடு இரண்டடியும் எழுத்து மிக்கு, நாலடியும் சீரொத்து வந்தமையால், 'யவமத்திமம் எனக் கொள்க.

1. இது வடமொழியில் ‘யவமத்தியயதி' எனப்படும். (இ.ப)