உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

136

இளங்குமரனார் தமிழ் வளம் – 14

"செந்தமிழோர் உய்ய” என்னும் பாடலில் (பலவித்து. 71), கருப்பு வில்லை முறிக்க ஐங்கரனையும், கடலை அடைக்க வேலனையும், சந்திரனைத் தேய்க்க வீரபத்திரனையும், மன்மதனை எரிக்க சங்கரனையும், தென்றலை உண்ண வாசுகியையும் வணங்கு என்பது கருத்து” என்றும் கூறுகிறார்.

சென்னிமலை என்னும் பாட்டில் (பலவித்து. 230), “கொண்டு கூட்டமாக எடுத்து ஆட்டுக்குக் காலில்லை; காலில்லை; யானைக்குக் கொம்பில்லை என்ற பொழுது ஆட்டத்திற்கேற்ற காலமைப் பில்லை என்றும் யானைக்குத் தலையில் கொம்பில்லை என்றும் கூறலாம்"என்று பொருள் கோள் விளக்கம் செய்கிறார்.

ஒரு மரக்காலிட்டு என்னும் பாடலில் (பலவித்து. 182), எழுபதினாயிரம் என்பதில் எழு என்பதற்கு ‘எ’கரமும், பது என்பதற்கு ‘ய’ கரமும், ஆயிரம் என்பதற்குத் ‘த’ கரமும் சேர்ந்து எய்த என்ற சொல் வருவது காண்க எனத் தமிழ் எண்ணின் எழுத்து வடிவைக் கூறுகிறார்.

நடுவெழுத்தலங்காரமாக வரும் பாடல்களுக்கு வேண்டும் குறிப்புகள் எழுதுகிறார். கூறப்படும் சொற்களின் நடு வெழுத்துகளைக் கூட்டினால் ஒரு சொல் கிடைக்கும். நடு வெழுத்து நீங்கிய ஒவ்வொரு சொல்லும் வேறு பொருளும் தரும், இவ்வாறு அமைக்கப்படும் சொல்லணிப் பாடல் நடு வெழுத்தலங்காரமாகும்.

“சீரான பசுவின்பேர் சென்னிப் பேரும்

செகம்புகழும் மாதுலன்பேர் கன்னிப் பேரும் பேரான மரத்தின்பேர் நிசத்தின் பேரும் பேசரிய இவ்வாறும் ஒன்றாச் சேர்த்து

ஏராக இவற்றினடு வொன்றாக் கூட்ட

இயல்பிரமன் சிவமெனவே இயம்ப லாகும்

வாரான ஈராறின் முன்பின் னான

ஆறுமொழி யவர்க்காக அமைந்த தன்றே.”

ப்பாடற் சொல்லுரைக்குப் பின்னே, குறிப்புரை உள்ளது. அது:

'கபிலை, சிரசு, மாமன், கன்னி, ஆசினி, சாசுவதம் என்ற ஆறு சொற்களின் நடுவெழுத்தைச் சேர்ந்தால் ‘பிரமன் சிவ’ என்ற சொற்களமையும். மற்ற எழுத்துக்களினாலாகிய சொற்கள் கலை, சிசு, மான் (பெண்), கனி, ஆனி, சா+சுதம் என்பன கடவுளுக்கில்லை: அதாவது கலையும் (ஆடையும்), சிசுவும்