உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமாலை

மணிமாலை என்பது தமிழ்க் கா.சு. நடத்திய திங்கள் இதழ். திருநெல்வேலி வடக்கு ரதவீதி மணிவாசக மன்றத் தலைவராக இருந்தவர் கா. சு. அம்மன்றத்தின் வழியாக வெளியிட்ட தழாகலின் ‘மணி' என்னும் முற்சொல் அமைந்ததெனவும், இதழினுள் சரிதமாலை, இலக்கிய மாலை, உலகியல் மாலை என மாலைப் பகுப்புகள், இருந்தமையால் மணியுடன் ‘மாலை’ இணைக்கப்பட்டது எனவும் கொள்ளலாம்.

6

காள்ளப்

கோவை என்பது மாலைக்கு ஒரு பெயர். கோவையில் கோக்கப்பட்டது மணி. ஆகலின் கோவை பெரும் பகுப்பாகவும் அல்லது ஆண்டுப் பகுப்பாகவும், மணி சிறுபகுப்பாகவும் அல்லது திங்கள் பகுப்பாகவும் அமைத்துக் பட்டுள்ளது. ஆதலால் கோவை 1: மணி 1 என இதழ்த் தலைப்பில் இடம் பெறலாயிற்று. இவ்வகையில் கோவை 1, மணி 12 என ஓராண்டு தொடர்ந்து நடத்தப் பெற்று உள்ளது. ஆண்டு 1935 ஆகும்.

1

மணிவாசகர் மன்றச் சார்பில் இதழ் நெல்லையில் இருந்து வெளி வந்ததாயினும் அதன் அச்சீடு டி. ஆர். சுப்பையாபிள்ளை என்பாரால் தென்காசி மீனாட்சி அச்சகத்தில் அச்சிடப் பட்டுள்ளது. அதன் ஆண்டுச் சந்தா ரூ. 5. ஆயுள் சந்தா ரூ. 100, பாதுகாப்பாளர் ரூ.1000, தனிப்பிரதி அணா 8 என்னும் குறிப்பு இதழில் உள்ளது. அதன் பதிவு எண்: எம் 3229 என்பது. ஒவ் வொரு மாதமும் 8- ஆம் நாள் (ஆங்கில மாதம்) இதழ் வெளிப் பட்டுள்ளது.

மணிமாலை

லக்கியம், இலக்கணம், சமயம், நாட்டு நடவடிக்கை, வரலாறு, அறிவியல், சமூக இயல், தொழில் இயல், சட்ட இயல், ஆங்கிலம் இன்ன பல துறைகளைத் தாங்கி வெளி வந்துளது. அதன் சிறப்புகள் பலப் பல.

கா. சு. தாமே அவ்விதழிலமைந்த செய்திகள் அனைத்தையும் படைத்து வழங்கியுள்ளார். அவர் தனியொரு பல்கலைச் செல்வர் என்பதை நன்கு நிறுவும் சான்று அது.