உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தமிழ்க் 'கா.சு.' கலைக்களஞ்சியம்

161

இதற்குப்பின் இவர்கள் கூடவில்லை என்கிறார் கா.சு. மேலும் அருள் முறையாகிய அகிம்சையும், உண்மையின் ஆற்றலாகிய சத்தியாக்கிரகமும் திலகர் மனத்துக்கு ஒத்தவை யல்ல. ஆனால், அம்முறைகளின் வெற்றியைக் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் நிலை நாட்டினார் என்ப என்பதைத் தெளிவாக்குகிறார். சிறந்த கொள்கையாகிய இன்னா செய்யாமையை உலகெங்கும் பரவச் செய்வதற்குப் பிரிட்டீசு மக்கள் இனத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன் என்றும் காந்தியடிகள் கொள்கையை எடுத்துரைக்கிறார்.

பிராங்கிளின் டிரூசுவெல்ட்டைப் பற்றிக் கூறும் கா.சு., அமெரிக்கப் பொதுநல வாழ்க்கையில் வெற்றி பெற்ற பலரும் 50 அகவைக்கு முன் முயன்றடையாத பதவியை 38 அகவையிலேயே அடைந்தார் எனப் பாராட்டுகிறார். மேலும் அவருக்கு, 1921 இல் இளந்திமிர்ப் பிடிப்பு(வாத) நோய் கண்டு, இடுப்புக்குக் கீழே அசைக்க முடியாத நிலையில் இருந்தார். மூன்றாண்டு விடாது முயன்றும், உருள்கின்ற நாற்காலியில் இருக்கவும் ஊன்றுகோல் கொண்டு சிறிது தொலைவு நடக்கவுமே அவருக்கு முடிந்தது. அவர் அதிகமாக அசையக் கூடாத படியால் தம் வலுவை ஒரே இடத்தில் செலுத்தக் கூடியவராய், அவருக்கே இயல்பாக நகையுணர்ச்சியுடன் ஒருநாள் காலை முதல் மறுநாள் விடிகாலை வரை இளைப்பில்லாமல் வேலை செய்யக் கூடியவராய் இருந்தார் என்கிறார்.

நீராவி ஆற்றலைப் பொதுமக்கள் நலத்திற்காகப்பெருக்குதல், முதியோர்க்கு உதவிப்படி தருதல், உழவர்க்கு இடைஞ்சல் தீர்த்தல், வேலையில்லாத் திண்டாட்டத்தினர்க்கு அரசியல் உதவி புரிதல் ஆகியவற்றால் மக்களைக் கவர்ந்தார் எனப் புகழ்கிறார்.

ஒரு சிக்கலை அவரிடம் கொண்டு சென்றால், “நீங்கள் அதை என்னிடம் கொண்டு வரும் வரை அறிந்திலேன். அதனை எளிதாக முடித்துவிடலாம். அதில் ஒன்றுமில்லை" என்று நிறைவு படுத்துவதுடன் நிறைவித்தும் விடுவார். தம் துயர் கூறி நாளுக்கு 3000 கடிதங்கள் அவருக்கு வருகின்றன. எனினும் உரிய வகையில் அவரால் நிறைவுறுத்தப் படுகின்றன என்று அவர்தம் அரசியல் திறமையைப் பாராட்டுகிறார்.

முத்தபா கெமால் (துருக்கியத் தலைவர்) இலெனின், முசோலினி, இட்லர், ரூசுவெல்ட்டு, ரீசாசாபெலவி, காந்தியார்,