உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

163

ஏற்படுத்தியவர்களை மறதி முற்றிலும் மூடுவது போல வேறொன்றும் மூடுவதில்லை என்றும் கூறுகிறார். “உயிரற்ற வண்ணமற்ற பேச்சுப் பொறிகளைப் படைத்து உயர்ந்த அணி நயச் சொல் நடையில் பேச விடுகிறார்” என்பது அவர் நாடக உறுப்பினர் பற்றிய மதிப்பீடு என்று இரங்குகிறார் கா. சு. சாவினுடை ய சமய உணர்வின் அழுத்தத்தை ஒரு பொது மேடையில் பேசும்போது ‘சா’, தம் கைக்கடிகாரத்தை எடுத்துக் காட்டி நான் சொல்வது பொய்யானால் எல்லாம் வல்லவர் இன்னும் இரண்டு நிமையங்களில் என்னைச் வைப்பாராக' என அறை கூவியதைக் கூறி நிறுவுகிறார்.

சாக

சர். ஆலிவர் லாட்சு பூதவியல் ஆய்வாளர்; அறிவியலில் அறிவர் பட்டம் பெற்றவர். அதற்காகவே தம்மை முழுமையாக ஈடுபடுத்தியவர். அறிஞர் மார்க்கோனிக்கு முற்பட அத் துறையில் ஆய்ந்தவர். மாணவராகச் சென்ற காலை, அவர் புலமையை அறிந்து ஆய்வுப் பேராசிரியராக அமர்த்தப்பட்டவர்; ஆவியுலகத் தொடர்பை ஆய்ந்து பல நூல்கள் எழுதியவர். ஏழாம் எட்வர்ட்டு முடிசூட்டு விழாவில் ‘சர்’ பட்டம் பெற்றவர் (1902).

ரூதர்போர்டு நியூசிலாந்தில் பிறந்து, இங்கிலாந்து கேம் பிரிட்சில் அறிவியல் ஆய்வு மாணவராகத் திகழ்ந்து கதிரி ஆய்வில் சிறந்து விளங்கியவர். யூரேனியச் சுண்ணத்தில் இருந்து ஆல்பா, பீட்டா கதிர்கள் வெளிப் படுதலைக் கண்டார். 37 ஆம் அகவையில் நோபல் பரிசு பெற்றார். போர்டின் வரலாற்று நிறைவில், அணுவின் ஆற்றல் மனித வாழ்க்கைக்குப் பயன் படுத்தற்கு வெகு தொலைவில் இருக்கிறது. ஆனால், சில நூற்றாண்டுகளுக்குப் பின்னாவது மனிதக் கூட்டத்துக்குப் பயன்படக் கூடிய பெரிய ஆற்றல் ஊற்றாக அது விளங்கும். அக்காலத்து மக்கள் அங்ஙனம் அணு ஆற்றலைப் பயன் படுத்தற்கு முன்னாகச் செய்யப் பட்ட ஆராய்ச்சிகளுக்கு ரூதர் போர்டு வழிகாட்டியாக இருந்தார் என்று அவரை மதிப்பார்கள் என்றார். விரைவில் அணு அச்சத்தை உலகம் கண்டுவிட்டது! ஆக்கத்தைக் காண வேண்டும் என்பதே அருளாக்கம்.

ன்

இத்தொகுதியின் இறுதி வரலாற்றாளர் பால் இண்டன் பர்க்கு என்பார். ஒருவர் தம் வாழ்நாளில் முற்றிலும் வெவ்வேறான மூன்று வாழ்க்கை நடத்துதல் சிலர்க்கே முடியும். செருமன் சட்டமன்றத் தலைவராய், பெரும் படைத் தலைவராய், தொகுப்புக் கலைஞராய்த் திகழ்ந்தார். ‘எங்கே நான் வேலை