உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

167

கொண்டு போகின்றவரும் நமக்கென்ன என்று நழுவுகின்றவரும் தாமே மே மிகப்பலர். ஆனால் எல்லாருமே அப்படி இருந்து விடுகின்றனரா எனில், இல்லையே!

எவரோ ஒருவர் அக்கூட்டத்தை விடுத்துத் துணிந்து சொல்கிறார். துணிந்து என்றால், கூட்டத்தில் இருந்து துணிந்து (பிரிந்து) சொல்லுதல் என்பதைக் குறித்து, அது அவர்தம் தன்மையைக் குறிப்பதாயிற்று. அவ்வாறு சென்றவர் பின் விளைவு என்ன என்பதைக்கூடக் கருதாமல் தட்டிக் கேட்கிறார். துணிச்சலாகச் செயலாற்றுகிறார். கூட்டத்தோடு கூட்டமாக அமைந்துவிடாமல், நூற்றொடு நூற்று ஒன்றாக நின்றுவிடாமல் தனியொருவராகத் துணிந்து செல்வதால் அவர் தன்மை துணிவு ஆயிற்று. அவர் துணிவாளர் என்றும், துணிச்சல்காரர் என்றும் பாராட்டப்படுபவர் ஆனார்.

கோடி, கோடி மக்கள் இருந்தாலும் வல்லாண்மை மிக்க ஆங்கில வணிகரை எதிரிட்டுக் கப்பலோட்ட எத்துணைப் பேர்க்குத் துணிவு வந்தது? அவருள் துணிந்த ஒருவர் வ. உ. ஆனார்.

சி.

னித் ‘துணிவு' என்பதற்கு வேறொரு பொருளும் உண்டு. அது முடிவு செய்தல்' என்பது. “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின், எண்ணுவம் என்பது இழுக்கு” என்பதும் “சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்” என்பதும், “எண்ணித்துணி' என்பதும் இப்பொருளில் வருவன. இத்துணிவுக்கு முடிவு செய்தல் என்னும் பொருள் எப்படி வந்தது?

ஒன்றைப்பற்றி ஆராயுங்கால் பலப்பல கருத்துகள் அடுத்தும் தொடுத்தும் உண்டாகின்றன. அவற்றுள் ஒவ்வொன்றாக ஆய்ந்து விலக்குவ விலக்கித் தக்கதைத் தேர்ந்து முடிவாகக் கொள்வதே அத் ‘துணிவு' ஆகும். பலவற்றை ஆய்ந்து விலக்கி ஒன்றைத் தக்கதெனத் தனித்து அல்லது துணித்து எடுத்துக் கொண்டமையால் அது துணிவு எனப்படுகின்றதாம். அதனால் துணிவுக்கு உறுதிப்பொருள் என்பதும் உளதாயிற்று.

ஒருவர் வரலாற்றில் அமைந்த ஒரு சிறு நிகழ்ச்சியை அல்லது ஒரு நூலின் ஒருசிறு பகுதியைத் தனித்துக் காட்டுதல் ‘துணுக்கு’ எனப்படுகின்றது. துணுக்குச் செய்தி இடம் பெறாத ம் நாளிதழும் இல்லை என்றால், கிழமை இதழ், திங்களிதழ், மலர் என்பவற்றைச் சொல்ல வேண்டுவது இல்லை. துணுக்கைப் படித்த அளவானே இதழை மூடிவைப்பாரும் உளர் என்பதால்