உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

275

‘எனக்குத் துணையாக வந்து வெற்றி வாய்ப்பைத் தந்தவன் நீயே' என்று வென்றவன் புகழ்வான்! 'எனக்குத் துணையாக வாராமையால் யான் தோல்வி கண்டேன்' என்று தோற்றவன் புகழ்வான்'. காரிக்கு இருபால் புகழும் உண்டு!

66

'கடந்தட்டு வென்றோனு நிற்கூறும்மே,

வெலீஇயோன் இவனென

99

“தோற்றோன் தானுநிற் கூறும்மே தொலைஇயோன் இவனென

வென்றவனும் தோற்றவனும் ஒருங்கே புகழ வாய்க்கும் பேறும் வீறும் பொதுவாக எவருக்கும் வாய்ப்பனவோ? ஆகலின், இப் பெருமிதத்தைக் கூறும் பெருஞ் சாத்தனார், ‘ஒரு நீயாயினை பெரும' என வியந்தார் (புறம். 125).

காரியின் ஒருதானாய வீறே அவனுக்குக் காரிப் பெயரைத்

தந்ததாம்.

காரி என்பதொரு புள்; கரும்புள், கரும்பிள்ளை என்பனவும் அது கரிக்குருவி, கரிச்சான் என்பனவும் அது. வலியன், வல்லூறு, வலுசாறு என்பனவும் அதுவே. வலியன், ‘வயன்’ என இலக்கியத்தில் இடமும் பெறும்! காரி எவ்வாறு ஒரு தானாய வீரன் எனச் சாத்தனார் குறிக்கின்றாரோ, அது போலவே ‘புள்' என்றாலே கரும்புள்ளாய காரிக் குருவியையே குறிக்கும். அக் குறிப்பு இக் காரியைப் பற்றிக் கபிலர் பாடும் பாட்டிலேயும் இடம் பெற்றுள்ளது. நாளன்று போகிப் புள்ளிடை தட்ப் என்றார் அவர்.

பறவையின் வேந்தென வளையமிடுவது 'இராசாளிப்’ பறவை. அவ்வரசாளியை ஆட்டி வைப்பது காரிப் பறவையாம் கரிச்சான்! உடலால் கிறியது; உரத்தால் அரியது; ஆதலால் பெரியவையும் அறைபட்டு அலறும்! அஞ்சி ஓடும். இக் காட்சியை நாம் கண்டது இல்லையோ?

வலிய காரிப் பறவை மிகப் பழங்காலந் தொட்டே சொகினம் (சகுனம்) காட்டும் பறவையென்னும் குறிப்புண்டு. அது தடுத்தால் தோல்வி என்றும், வழி விட்டால் வெற்றி யென்றும் வீரர்கள் குறிக்கொண்டனர். புலரி விடியல் புள்ளோர்த்துக் கழிமின்' என்பது மலைபடுகடாம். 'நாளும் புள்ளும்' கேளா ஊக்கம்' என்பது தகடூர் யாத்திரை.