உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

63. செங்கோன்மை

233

(“அரசனால் செயப்படும் முறையினது தன்மை. அம் முறை ஒருபாற் கோடாது செவ்விய கோல் போறலின் செங்கோல் எனப்பட்டது” - பரிமே.

-

"செவ்விதாகிய முறைசெய்தலுடைமை. குற்றமும் குணமும் தூக்கி ஆராய்தலால் கோல் என்றார். அது கோடாமையால் செங்கோல் ஆயிற்று” - மணக்.

இ. பெ.அ: திருக். 55

இ.சா.அ: பழமொழி. 25. (அரசியல்பு) ப.பா.தி. 44 (அரசு) நீதிக். 68 (அரசியல்))

661.

662.

உறவினர் ஆயினும் உண்மையால் ஆய்க

எங்கண் ணினைய ரெனக்கருதி னேதமால் தங்கண்ண ரானுந் தகவில கண்டக்கால் வன்கண்ண னாகி யொறுக்க வொறுக்கல்லா மென்கண்ண னாளா னரசு.

கி

முறைமைக்கு மூப்போ இளமையோ வில்லை

சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக் காலை கழிந்ததன் 'பின்றையும் - மேலைக் கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான் முறைமைக்கு மூப்பிளமை யில்.

நீரும் பாலும் நேரொப் பாமோ?

663. முறைதெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந் தவர்க்கும்

இறைதிரியா 'னேரொத்தல் வேண்டும் - முறைதிரிந்து நேரொழுகா னாயி னதுவா மொருபக்கம்

நீரொழுகப் பாலொழுகு மாறு.

1. பிற்றையும்.

2. னேரொக்க.